மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்!
சென்னை: மாநகரம் நடிகர் ஸ்ரீ மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். சமீப காலமாக பல சர்ச்சைகள், உடல்நிலை குறித்த கவலைகள், சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் ஆகியவற்றால் தொடர்ந்து செய்திகள் வந்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்திருக்கிறது.

நடிகர் ஸ்ரீ வெளியிட்ட பதிவு
இந்த முறை, அவர் ஒரு இளம் பெண்ணுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைவிட அதிகமாக பேசப்படும் விஷயம் என்னவென்றால், அந்த பதிவுக்கு அவர் எழுதியிருந்த நீண்ட மெசேஜ் தான்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "உங்களை அறிந்திருப்பதும், உங்களுடன் நண்பராக மாறியிருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு குறுகிய காலத்திலேயே நாமிடையே உருவான இந்த நட்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீங்கள் என்ன மாதிரியான மனிதர் என்பதற்காகவே நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எனக்கு கடவுள் அனுப்பியவரைப் போல. என் நாளை அழகாக மாற்றியதற்கு நன்றி. நம் நட்பு இப்படியே தொடரட்டும்" என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவர் பதிவு செய்திருந்தார்.

இந்த வார்த்தைகள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது வெறும் நண்பரா? அல்லது அதற்கு மேல் ஏதாவது உறவா? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழ ஆரம்பித்திருக்கிறது. சிலர் "ஸ்ரீ மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார், இது நல்ல விஷயம்" என்று பாராட்டி வர, இன்னொரு பக்கம் "இந்த பதிவு ஏதோ புதிய திருப்பத்தை காட்டுகிறது" என்றும் பேசப்படுகிறது.
நடிகர் ஸ்ரீ சினிமா பயணம்
நடிகர் ஸ்ரீ பற்றி பேசும்போது, அவர் கடந்த சில மாதங்களில் சந்தித்த சர்ச்சைகளை தவிர்க்க முடியாது. 'மாநகரம்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வழக்கு எண் 18/9', 'இறுகப்பற்று' போன்ற படங்கள் மூலம் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஆனால் அதற்குப் பிறகு அவர் வெளியிட்ட சில வீடியோக்கள், உடல் எடை குறைந்து காணப்பட்ட தோற்றம், வித்தியாசமான நடத்தை ஆகியவை ரசிகர்களை கவலைப்பட வைத்தது.
நடிகர் ஸ்ரீ பற்றிய சர்ச்சை
சிலர் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று கூற, இன்னொருவர் அவர் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார் என்ற வதந்திகளும் பரவின. மேலும் சம்பள பிரச்சனை காரணமாகவே அவர் இப்படி மாறிவிட்டார் என்ற பேச்சுகளும் எழுந்தன. இந்த எல்லா சர்ச்சைகளும் ஒரே நேரத்தில் எழுந்ததால், அவர் குறித்து ரசிகர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில், அவரது குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்டார்கள் என்றும், அவர் சமூக வலைத்தளங்களில் இருந்த பல பதிவுகளை நீக்கிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியானது. அதற்குப் பிறகு சில நாட்கள் அவர் பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
நடிகர் ஸ்ரீ எழுதிய நாவல்
அதற்குப் பிறகு திடீரென அவர் வெளியிட்ட வீடியோவில், தானே எழுதிய 'மே ஐ கம் இன்?' என்ற இங்கிலீஷ் நாவலை வெளியிட்டதாக கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதனால், "ஸ்ரீ மீண்டும் கம்பேக் கொடுக்கிறார்" என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவானது.
இப்போது வந்துள்ள இந்த புதிய பதிவு, அந்த நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர் எழுதிய வார்த்தைகளில் ஒரு அமைதி, ஒரு நம்பிக்கை தெரிகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மொத்தத்தில், பல சர்ச்சைகளையும் கடந்து, மெதுவாக தனது வாழ்க்கையை சீர்செய்து கொண்டு வருகிறார் நடிகர் ஸ்ரீ என்றே தோன்றுகிறது. இந்த புதிய நட்பு அவருக்கு ஒரு புதிய ஆரம்பமா? அல்லது வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான திருப்பமா? என்பதற்கு பதில் வரும் நாட்களில் தான் கிடைக்கும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி.. ஸ்ரீ மீண்டும் பழைய ஸ்ரீயாக திரும்ப வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications