Maarisan 1st day box office: வடிவேலு - ஃபகத் பாசில் கூட்டணியின் தள்ளாட்டம்! - முதல் நாள் வசூல் இத்தனை லட்சம் தானா?
சென்னை: சுதீஷ் சங்கர் இயக்கத்தில், மக்கள் செல்வன் வடிவேலுவும், இந்திய அளவில் கவனம் ஈர்த்த ஃபகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த 'மாரீசன்' திரைப்படம் நேற்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியானது. 'மாமன்னன்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மத்தியில் ஒரு இமாலய எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால், முதல் நாள் வசூல் நிலவரம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததோடு, படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த கூட்டணி
வடிவேலுவும், ஃபகத் பாசிலும் இதற்கு முன்னர் இணைந்து நடித்த 'மாமன்னன்' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் 'மாரீசன்' படத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்தப் படம் எப்படி இருக்குமோ என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். படக்குழு வெளியிட்ட டிரெய்லரும் இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.

'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு 'வேலாயுதம்' என்கிற மறதி நோய் கொண்ட கதாபாத்திரத்திலும், ஃபகத் பாசில் 'தயா' என்கிற திருடன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒருநாள், ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும் வேலாயுதம், PIN எண்ணை மறந்து விடுகிறார். அப்போது அங்கு வரும் திருடன் தயா (ஃபகத் பாசில்), வடிவேலுவிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து, எப்படியாவது அதை திருட முடிவு செய்து, அவரை பைக்கில் அழைத்துச் செல்கிறார். இந்த மர்மமான பயணத்தில் என்ன ஆனது? வடிவேலுவிடம் இருந்து ஃபகத் பாசில் பணத்தைத் திருடினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதை சூப்பர்
'மாரீசன்' படத்தின் கதைக்களம் சுவாரசியமாக இருந்தாலும், அதை எடுத்த விதத்தில் இயக்குநர் கோட்டை விட்டிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே 'மாரீசன்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்திற்குப் போதுமான புரமோஷன் செய்யப்படாததும், அதன் சுமாரான வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நேற்று இதே தினத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படக்குழு செய்த ப்ரோமோஷனில் 10 சதவீதம் கூட 'மாரீசன்' படத்திற்குச் செய்யப்படவில்லை. இதனால், பாக்ஸ் ஆபிஸில் 'மாரீசன்' திரைப்படம் செம அடி வாங்கி உள்ளது. இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாரீசன் முதல் நாள் வசூல்
'மாரீசன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி, திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபகத் பாசில் - வடிவேலு என இரு திறமை வாய்ந்த நடிகர்கள் நடித்திருந்தும், இந்திய அளவில் இப்படம் வெறும் ரூ.75 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது.
வசூலில் தடுமாற்றம்
இதற்குப் போட்டியாக வெளிவந்த விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' திரைப்படம், இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலித்திருக்கிறது. அதில் பாதி வசூல் கூட 'மாரீசன்' படத்திற்கு கிடைக்காதது, இந்த இரு பெரும் நடிகர்களின் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள் என்பதால், 'மாரீசன்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகுமா? அல்லது 'மாமன்னன்' உருவாக்கிய மேஜிக் வெறும் கனவாகவே கலைந்துவிடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications