Naam Iruvar Namakku Iruvar Serial: மாயன் அப்டி என்னாத்தான் படிச்சாப்டி... பாஸாயிட்டாப்ளையே!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் எப்போதும் தப்பு தப்பா பதில் சொன்ன மாயன், அப்படி என்னத்தான் படிச்சு இப்போ பாஸாகி இருக்கான்? தேவி பேப்பரைத் திருத்திட்டு பாஸாயிட்டன்னு சொல்றாளே...!
புத்தகத்தை எடுக்கும் போதெல்லாம் ஏபிசி நீ வாசி.. சோ ஈஸி உன் ராசி.. வா ரோஸி என்றும் கைதியின் டைரி பாடல் கதையைத்தான் இருந்துச்சு. தேங்க்ஸ் என்று எழுதி படிக்க சொன்னா டேங்ஸ்னு சொன்னான்.
கேட்டால் மதுரையில இப்படித்தாங்க டேங்ஸ் சொல்வாய்ங்கன்னு சொன்னான். இவ்வளவு ஏன்.. செம்மை + மொழி சேர்த்து சொல்லுடான்னு குஸ்தி அப்பா சொன்னா செம்ம மொழின்னு சொன்னான்.

ஜிங்குச்சான் மாயன்
மாயன் எப்போதும் ஜிங்குச்சான் கலர்ல வேஷ்டி கட்டிக்குவான். அதாவது அந்த வேஷ்டயின் உள்ளே ஒரு கலர் இருக்கும், வெளியே ஒரு கலர் இருக்கும். அதுல அந்த வேஷ்டியின் உள்ளே இருக்கும் கலர் தெரியற மாதிரி வேஷ்டியின் ஒரு முனையை தூக்கி வேற கையில புடிச்சுகிட்டு நிப்பான். சட்டைக்கு ஒரு கண்ணாடி...கண்ணுக்கு ஒரு கண்ணாடின்னு ரெண்டுமே கூலிங் கிளாஸ்.

மதுரைக்கார மாயன்
மதுரைக்கார மாயன் தேவிக்கு மாமனாகணும்னு என்னென்னவோ செய்து பார்த்துட்டான். கடைசியில் டெஸ்ட்டில் பாஸ் ஆனாத்தான், மாயன் எனக்கு மாமான்னு எங்கப்பா கிட்டே நான் கெத்து காட்ட முடியும்னு சொல்லிட்டா தேவி. மாயனும் சரி சின்சியரா படிச்சு டெஸ்டில் பாஸாகலாம்னு முடிவு எடுத்துட்டான். பாம்பே டாடிகிட்ட போயி படிச்சும் முடிச்சுட்டான்.

கேள்வித்தாள் நைசா
நைசா தேவியின் தங்கச்சியை வச்சு கேள்வித்தாளை திருடியாச்சு. என்னடா என்னிக்கும் இல்லாத திருநாளா தங்கச்சி வந்து ஆசையா பேசறாளேன்னு நினைச்ச தேவி, கேள்வித்தாளை மாத்தியும் ரெடி பண்ணிட்டா. மாயன் கையில வாங்கிப் பார்த்தவன்.. உடனே டர்ராயிட்டாப்படி. பின்னே கேள்வித்தாள் வேற இல்ல இருக்கு.

மாத்திப்புட்டாய்ங்களே
அய்யயோ கொஸ்டின் பேப்பரை மாத்திப்புட்டாய்ங்களேன்னு புலம்பின மாயன் பரீட்ச்சை எழுதி முடிச்சுட்டான். தேவி விடைத்தாளை நிறுத்திட்டு வந்து சொல்றா நம்பமுடியலைங்க... ஆமா.. அப்படி என்னத்த படிச்சான் மாயன்...இப்போ பாஸாயிட்டேன்னு சொல்றா தேவி. இனி என்ன முதலிரவுதான்..!












Click it and Unblock the Notifications