செஃப் தாமு மறைவால் கலங்கிய மாதம்பட்டி ரங்கராஜ்! விஜய் டிவி பிரபலங்கள் உருக்கம்.. நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: சின்னத்திரையில் நம்மை சிரிக்க வைத்த ஒரு முகம் திடீரென இல்லை என்ற செய்தி வந்தால், அதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். அதிலும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு செஃப் தாமுவின் மறைவு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடன் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றியவர்களும், அவரிடம் அன்பு காட்டி பழகியவர்களும் இப்போது தங்களுடைய சோகத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டிருக்கும் பதிவு பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

ரங்கராஜ் உருக்கம்
செஃப் தாமுவின் மறைவு செய்தியை கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Rest in peace chef damu Appa" என்று பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து, தான் மிகவும் மதித்த ஒருவராகவும், அப்பா போன்ற ஒரு நபராகவும் செஃப் தாமுவை பார்த்ததேன். அவருடைய இருப்பும், அவர் மீது வைத்திருந்த மரியாதையும் எப்போதும் என்னுடைய மனதில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் என்றும் ரங்கராஜ் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். பதிவுடன் அழுகையை வெளிப்படுத்தும் எமோஜிகளையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு சக கலைஞர் மறைந்துவிட்டார் என்ற வருத்தத்தைத் தாண்டி, அப்பா போன்ற ஒருவர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற உணர்வுதான் இந்த பதிவில் தெரிகிறது. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருவரும் நடுவராக 3 சீசன்களாக இருந்திருக்கிறார்கள் அதனால்யே இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு பாசம் ஏற்பட்டிருக்கிறது.
குரோஷியின் பதிவு
நடிகரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கேற்றவருமான குரோஷியும் செஃப் தாமுவின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது, அன்பில் அப்பாவாகவும், திறமையில் ஒரு ஜாம்பவானாகவும் இருந்தவர்; அவரை எப்போதும் மிஸ் செய்வோம் என்று கூறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குரோஷி அதிகமாக செஃப் தாமுவிடம் சீண்டி விளையாடிக் கொண்டு இருப்பார். ஒருமுறை தாமு கீழே விழுவதற்கு கூட குரோஷிதான் காரணம். ஆனாலும் அதை எல்லாம் தாமு எப்போதும் பெரிதாக காட்டி கொண்டது கிடையாது.
குரோஷியின் இந்த வார்த்தைகளும் செஃப் தாமுவுடன் பணியாற்றியவர்களின் மனதில் எப்படிப்பட்ட இடத்தை பிடித்திருந்தார் என்பதை உணர்த்துகின்றன. நிகழ்ச்சியில் கோமாளிகளின் குறும்புகள் ஒருபுறம் இருந்தாலும், அவர்களுடன் தாமு பழகிய விதமும், நிகழ்ச்சியில் உருவான நெருக்கமும் பார்வையாளர்களுக்கு தெரிந்ததுதான்.
அன்பான உறவு
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வெற்றிக்கு சமையல் போட்டிகள் மட்டுமே காரணம் இல்லை. நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் இடையே உருவான இயல்பான உரையாடல்களும், அன்பும், கலகலப்பும்தான் நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கின. அதில் செஃப் தாமுவுக்கும் முக்கியமான இடம் இருந்தது.
சமையல் விஷயத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அதே நேரத்தில், நிகழ்ச்சியில் இருப்பவர்களுடன் சிரித்து பேசி பழகுவது தான் அவருக்கு பிளஸ். அதனால்தான் அவருடன் பணியாற்றியவர்கள் இன்று அவரை நினைவுகூரும்போது, சமையல் கலைஞர் என்ற அடையாளத்தைத் தாண்டி தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான நபராக குறிப்பாக அப்பாவைப் போல இருந்தவர் என்றே குறிப்பிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications
