மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா குழந்தைக்கு மொட்டை அடித்த பங்க்ஷன்.. முதல் மனைவி ஸ்ருதியின் பதிவு வைரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா இடையிலான குழந்தை விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இரண்டாவது திருமணம், குழந்தையின் தந்தை யார் என்று சர்ச்சை நீதிமன்ற வழக்கு டி.என்.ஏ பரிசோதனை என அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்த இந்த விவாகரத்தில் தற்போது வெளியாகியிருக்கும் சில புகைப்படங்கள் மீண்டும் சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி இருக்கின்றன.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு கடந்த வருஷம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜனுடையது தான் என்று ஜாய் தொடர்ந்து கூறி வந்தார். தமிழ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் குழந்தை விஷயத்தில் தனக்கு சம்பந்தமே இல்லை, ஒருவேளை அந்த குழந்தை என்னுடையது என்று நிரூபனமானால் அந்த குழந்தைக்கான செலவை வாழ்நாள் முழுக்க நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று மாதம் பட்டி ரங்கராஜ் தெரிவித்து இருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜன் மகன் பங்க்ஷன்

இது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த விவாகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் டிஎன்ஏ பரிசோதனை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜன் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் மகன் ராகாவுக்கு முழு பொறுப்புடன் துணை நிற்பதாகவும், அவருடைய நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்திற்கு உள்ள செலவுகளை தான் கடைசி வரைக்கும் கவனித்துக் கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

Madhampatty Rangaraj Joy Crizilda Controversy

மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி

இந்த நிலையில் தற்போது ராகா ரங்கராஜுக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜன் மடியில் வைத்து தான் குழந்தைக்கு மொட்டை போடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை ஜாய் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் பல கேள்விகளும் எழுந்து வருகிறது. ரங்கராஜ்- ஜாய் பிரச்சனையின் போது தன்னுடைய கணவருக்காக ரங்கராஜன் மனைவி துணையாக நின்றார்.

Madhampatty Rangaraj Joy Crizilda Controversy

ரசிகர்கள் கேள்வி

மாதம்பட்டி ரங்கராஜ்க்கு சப்போட்டாவும், பல போஸ்ட்டுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய்யுடன் சேர்ந்து இருக்கும் நிலையில் அதே வேஷ்டி சட்டையில் சில வருடங்களுக்கு முன்பு மாதம் பட்டி ரங்கராஜ் தன்னுடைய மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சில நெட்டிசன்கள் இந்த ஃபங்ஷனில் மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளும் கலந்து கொண்டிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Madhampatty Rangaraj Joy Crizilda Controversy

முதல் மனைவியின் நிலை

ஆனால் இந்த புகைப்படம் சில வருடங்களுக்கு முன்பே மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி போஸ்ட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விசாரணைக்காக மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்திற்கு போகும் போது கூட அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு முதல் மனைவி கோர்ட்டுக்கு துணையாக வந்திருந்தார். ஆனால் இப்போது மாதம் பட்டி ரங்கராஜன் அவருடைய இரண்டாவது மனைவியுடன் சேர்ந்திருக்கும் நிலையில் முதல் மனைவி நிலை என்ன என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+