Madhan bob: இசையமைப்பாளர், பாக்சர்.. ஏ.ஆர்.ரஹ்மானின் குரு.. மதன் பாப் பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!
சென்னை: நகைச்சுவை நடிகர் மதன்பாப் இன்று காலமானார். மதன்பாப் இசைக் கலைஞராக அசத்தியவர். ஏ.ஆர்.ரஹ்மானும் மதன்பாப்பின் இசைக்குழுவில் வாசித்திருக்கிறார். பாக்ஸிங் விளையாட்டு வீரராகவும் இருந்தவர் மதன்பாப்.
நடிகர் மதன்பாபுவை நாம் காமெடி கதாபாத்திரங்களில் ரசித்துப் பார்த்திருப்போம். இவரது நகைச்சுவையும், தனித்துவமான சிரிப்பும் அனைவருக்கும் பிடித்தமானது. எக்கசக்கமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார் மதன்பாப். மதன்பாப் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர்.

நகைச்சுவை நடிகர்களில் இசையமைக்கத் தெரிந்தவர் என்ற பெருமை மதன்பாப்பிற்கு உண்டு. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மியூசிக் ட்ரூப் வைத்திருந்தபோது இவருடன் இளையராஜா கங்கை அமரன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், மதன்பாப் குழுவில் கீபோர்ட் வாசித்து இருக்கிறார். இதை ஒரு படத்தின் இசை வெளியீட்டில் ஏ.ஆர்.ரகுமானே கூறியிருந்தார். தனது குரு என மதன்பாப்பை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஒரு காலத்தில் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். சென்னையில் கொடிகட்டிப் பறந்த 'சார்பட்டா பரம்பரை' பாக்சிங் டீமில் இவரும் ஒருவர். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், மதன்பாப்பின் 'கோச்'களாம்.
மதன்பாபுவின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நடிப்பதற்கு முன் இசைக்கலைஞராக பயணித்து வந்த போது இசை ட்ரூப் வைத்திருந்தார். அதில் தன் தம்பியுடன் பணியாற்றும் போது மதன் & பாபு ட்ரூப் என்ற பெயர் வைத்திருந்தார். பின் அதையே பலரும் கூப்பிட இவரது பெயர் மதன்பாபு என்றானது.
இவர் ஆரம்ப காலத்தில் இசை ட்ரூப் வைத்திருந்தபோது இவருடன் இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோர் பணியாற்றினார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இவர்கள் குழுவில் கீபோர்ட் வாசித்து இருக்கிறார். இதை ஒரு படத்தின் இசை வெளியீட்டில் ஏ.ஆர்.ரஹ்மானே கூறியிருந்தார்.
தென்னிந்திய சினிமாக்களுக்கு பல விளம்பரங்களுக்கு இசை அமைத்துள்ளார் மதன்பாப். விளம்பரங்களுக்கு மட்டுமல்ல நாடகங்கள், மேடை நாடகங்கள், கச்சேரிகளுக்கும் மதன் பாபுவின் ட்ரூப் இசையமைத்துள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான 'நீங்கள் கேட்டவை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமனார் மதன் பாப். அதைத்தொடர்ந்து 'வானமே எல்லை', 'தேவர் மகன்', 'நம்மவர்', 'மகளிர் மட்டும்', 'சதி லீலாவது', 'பூவே உனக்காக', 'நேருக்கு நேர்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதன்பாப் காலமானார். மதன் பாப்பின் உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications