பிக் பாஸ் வைல்ட் கார்ட்.. சீமானோடு இந்த நால்வருடன் நான்.. விளக்கம் கொடுத்த நடிகர் மாதவன்
சென்னை: நடிகர் மாதவன் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் தான் அதில் கலந்து கொள்வது குறித்து தன்னுடைய மனநிலை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஒருவேளை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் தன்னோடு சேர்த்து சீமானோடு சேர்ந்து இன்னும் நான்கு பேரை போட்டியாளராக அழைத்து செல்வேன் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் மாதவன் தன்னுடைய சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் நடிகர் மாதவன் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகள் தனக்குள் இருந்தாலும் ஒரு தேசிய திரைப்பட விருது, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளையும் பெற்று இருக்கும் இவர் தற்போது புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அங்கீகாரம் பெற்ற மாதவன் அதைத் தொடர்ந்து மின்னலே, டும் டும் டும் போன்ற திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ஜேஜே, எதிரி போன்ற திரைப்படங்கள் மூலமாக தனக்கு மிரட்டலான நடிப்பும் தெரியும் என்று மிரட்டி இருப்பார்.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரைக்கும் சினிமாவில் பெரிய அளவில் நடிக்காமல் ஓய்வில் இருந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அதில் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகர்.
கமல் சாரினுடைய பக்தர் என்று சொல்லலாம். ஏனென்றால் நான் கமல் சாரின் வீட்டிற்கு போய் இருக்கிறேன். அவர் காலை எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் சினிமா பத்தியே யோசிக்க கூடியவர். அவருக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் கிடையாது. எந்த கமிட்மெண்டும் கிடையாது. எப்போதுமே கமல் சார் சினிமாவுக்காகவே தன்னுடைய சிந்தனைகளை முழுவதும் செலவழித்து கொண்டிருக்கக் கூடியவர் என்று அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மாதவனிடம் நீங்கள் ஹிந்தியிலும் நடித்திருக்கிறீர்கள், தமிழிலும் நடித்திருக்கிறீர்கள் அதில் உங்களுக்கு பிடித்தமான ஆசான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, முதலில் நான் இதுவரைக்கும் பிக் பாஸ் எபிசோடு பார்த்தது கிடையாது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதற்கு ஒரு மனநிலை இருக்க வேண்டும். அது எனக்கு கிடையாது. ஆனால் ஒரு வேல வாய்ப்பு கிடைத்தால் கமல் சார், மணி சார், சூர்யா, சீமான் என நான்கு பேரை நான் கூட்டிக்கொண்டு போவேன் என்று அந்த பேட்டியில் மாதவன் பேசியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications