Madhrasi 6th day Box Office: மதராஸிக்கு வந்த சோதனை! 6வது நாள் வசூல் இவ்வளவுதானா? வெளியான தகவல்
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான மதராஸி திரைப்படம், முதல் சில நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், தற்போது அதன் வசூல் குறையத் தொடங்கியுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலவையான விமர்சனங்கள்
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், பிஜு மேனன், விக்ராந்த் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே, கஜினி மற்றும் துப்பாக்கி படங்களின் சாயலில் இருக்கும் என்று இயக்குநர் கூறியதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. படம் வெளியான பிறகு, பல விமர்சகர்கள் பாசிட்டிவ் கருத்துகளைத் தெரிவித்தாலும், சில கலவையான விமர்சனங்களும் வந்தன. ரஜினியின் கூலி படத்திற்கு வந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்கள் இந்தப்படத்திற்கு வரவில்லை என்றாலும், ரசிகர்களின் ஆர்வம் முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு குறைந்து விட்டதாகவே தெரிகிறது.
வசூலில் தொய்வு
மதராஸி படம் வெளியாகி 6 நாட்களில் உலகளவில் ₹76 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகப் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில், 6 நாட்களில் வெறும் ₹46.75 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகச் சாக்னிக் இணையதளம் தெரிவித்துள்ளது. இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படத்திற்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
முன்னதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம், படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் ₹50 கோடி வசூல் செய்ததாக அறிவித்தது. ஆனால், அதன் பிறகு எந்தவித அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பும் வெளியாகாமல், மற்ற விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இது, படம் ₹100 கோடி வசூல் கிளப்பில் இணைவது கடினம்தான் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களில் ₹20 கோடி வரை வசூலித்தால் மட்டுமே, படம் ₹100 கோடி கிளப்பில் சேர வாய்ப்பு உண்டு எனவும், அதிகபட்சமாக ₹85 கோடி வரை மட்டுமே வசூலிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பாராட்டு மழையும், ட்ரோல்களும்
படத்தின் வசூல் குறையத் தொடங்கிய நிலையில், இரண்டாம் வாரத்தில் படத்திற்கு ஆதரவைத் திரட்ட, பிரபலங்களின் பாராட்டு மழையை படக்குழு தொடங்கிவிட்டது என்ற ட்ரோல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இயக்குநர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆகியோர் ஏற்கனவே படத்தைப் பாராட்டிய நிலையில், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்ததாகச் சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
சமீபத்தில் மாவீரன் படம் ₹100 கோடி வசூலை எட்டாமல் ₹80 கோடியுடன் நின்றுவிட்ட நிலையில், அதே நிலை மதராஸிக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், ₹202 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கல்யாணி பிரியதர்ஷன் படத்திற்கு இருந்த அளவு மதராஸிக்கு மக்கள் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை என்கின்றனர் சினிமா வல்லுநர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications