Madhrasi 3rd day Box Office: சிவகார்த்திகேயனின் அதிரடி! விடுமுறையில் மாஸ் காட்டிய மதராஸியின் 3வது நாள் வசூல்
சென்னை: 'அமரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அதிரடி நாயகனாக நடித்திருக்கும் படம் மதராஸி. இந்த திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியான நிலையில் நேற்று மூன்றாவது நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் பாதியில் ஆக்ஷனுடன் காதலையும் கலந்து கொடுத்து, இரண்டாம் பாதியில் முழுக்க ஆக்ஷன் படமாகவே வந்துள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு பலரும் 'சூப்பராக இருக்கு' என்றுதான் சொல்கின்றனர்.

படத்தின் கதை, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் ஊடுருவாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான். இந்தப் போராட்டத்தை, ஒரு கமர்ஷியல் படத்திற்கு எந்த அளவுக்குச் சுவாரஸ்யமாகக் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு கொடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வசூல் எதிர்பார்ப்பு
'மதராஸி' படத்தைப் பற்றி விமர்சகர்கள் சிலர் இரண்டாம் பாதி குறித்து அதிருப்தி தெரிவித்த போதிலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே, ₹100 கோடி வசூலிக்கும் என்று பேச்சு பரவலாக எழுந்தது. தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் செயற்கைக்கோள் உரிமை மூலம் பெரிய தொகையை ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஓடிடி உரிமை பிரைம் வீடியோவுக்கு ₹40 கோடிக்கும், செயற்கைக்கோள் உரிமை ₹26 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். இதனால், படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு 'மதராஸி' பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெகுவாக உயர்ந்து வரும் வசூல்
படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததாலேயே, வசூல் கணிசமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. Sacnilk அறிக்கையின்படி, மதராஸி படத்தின் முதல் 3 நாள்களுக்கான வசூல் விவரம் இதோ: முதல் நாள்: ₹13.65 கோடி, 2வது நாள்: ₹12.1 கோடி, 3வது நாள்: ₹10.71 கோடி ஆக மொத்தம், 3 நாள்களில் இந்திய அளவில் ₹36.46 கோடியை வசூலித்துள்ளது. முதல் 3 நாள்களும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் கணிசமாக வந்துள்ளது.
எதிர்பார்ப்பு
எந்த ஒரு படமும் விடுமுறை தினத்தில் கூடுதலாகவே வசூலிக்கும். ஆனால், இன்று திங்கள் கிழமை. வேலை நாள். இன்றுதான் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் தெரியவரும். இன்று முதல் படத்திற்கு வசூல் படிப்படியாக குறைகிறதா, அல்லது ஒரேயடியாக குறைகிறதா என்பதைப் பார்த்தால், படத்தின் உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படம் இன்னும் தொடர்ந்து தாக்குப்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மற்ற படங்களுடன் ஒரு ஒப்பீடு
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ₹44.5 கோடி வசூலித்தது. உலக அளவில் 'கூலி' ₹151 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. 'மதராஸி' திரைப்படம் 'கூலி'யின் சாதனையை நெருங்க முடியாவிட்டாலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'அமரன்' திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் ₹35 கோடி வசூலித்தது. இது 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் நான்காவதாக அதிக வசூலை அள்ளிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications