மதராஸியில் சிவகார்த்திகேயன் ரெக்கார்டு! கிணற்றில் போடப்பட்டு இன்று டக்னு கிளம்பிய ஹைப்! ரூ.40 கோடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி. இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி மதராஸி திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.. நேற்று சென்னையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.. முன்னதாக இந்த படத்தை குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு

மதராஸி படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.. ஆனால், இந்த படத்திற்கு அதிகளவிலான ப்ரோமோஷன்கள் இல்லையே ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் திடீரென டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்துள்ளது.. இந்த டிரெய்லர் வெளியான பிறகு படத்திற்கு, அதிகமான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

Television Sivakarthikeyan madhrasi

வெற்றி டைரக்டர்

இந்நிலையில், Cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் மதராஸி படம் குறித்து செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.. அதில், "பல வெற்றிகளை தந்த ஏஆர் முருகதாஸ், தற்போது தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்.. எனவே, இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

ஏஆர் முருகதாஸ், குரங்கை வைத்து படம் எடுக்க போவதாக சொல்கிறார்கள்.. அது எந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை.. எப்போதுமே வெற்றிகளை தரும்போதுதான் கூட்டம் தேடி வரும்.. 2 தோல்விகளை தந்துவிட்டால், தெருவில் நடந்து போனாலும், அவர்களை யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்..

அமரன் ஹிட்

அதேபோல சிவகார்த்திகேயன் கடந்த படத்தினுடைய வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளார்.. அமரன் என்ற ஹிட் படத்தை தந்தவர் சிவகார்த்திகேயன்.. அமரன் படம் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், ராஜ்கமல் பிலிம்ஸையே திணற வைத்தது, அமரன் பட ஹிட்டு.. கணிசமான லாபத்தையும் கமல் சம்பாதித்திருந்தார்.. அந்தவகையில், இரண்டுமே போராட்டமான விஷயமாகும்.

கூலி படம் மீது ஆயிரம் விமர்சனம் சொன்னாலும், தமிழ் சினிமாக்களுக்கு ஆக்ஸிஜன் தந்த படம் கூலி.. இந்த கூலி படத்துக்கு பிறகு வேறு எந்த பெரிய படங்களும் இந்த வருடம் கிடையாது.. அந்தவகையில், மதராஸியை பலரும் உற்றுநோக்கி வருகிறார்கள்..

உச்சியிலிருந்து சரிந்த முருகதாஸ்

தர்பார் என்ற படத்தை ரஜினிகாந்த் வைத்து முருகதாஸ் எடுத்திருந்தார்.. அந்த படம்தான் முருகதாஸை இமயமலை உச்சியிலிருந்து கீழே தரதரவென இழுத்து கொண்டுவந்துவிட்டது..

தர்பார் ஏன் தோல்விப்படமாக அமைந்தது என்று அப்போது முருகதாஸிடம் கேட்கப்பதற்கு, அந்த நேரத்தில் ரஜினி சார், அரசியலுக்குள் வருவது மாதிரியான காலகட்டம் இருந்தது.. சீக்கிரமாக படத்தை முடிக்க சொல்லி எனக்கு அழுத்தம் தந்தார்கள்.. இந்த தர்பார் படத்துடன், அரசியல் களத்திற்குள் ரஜினி சார் நுழைய போவதால், அழுத்தம் தந்தார்கள் என்று விளக்கம் தந்திருந்தார்.. ஆனால், ஒரு தேர்ந்த டைரக்டர் இப்படியான காரணங்களை சொல்லவே கூடாது..

கிணற்றில் போட்ட கல்

இப்போது மதராஸி படம் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.. ஆனால் தன்னுடைய பேட்டிகளில் மதராஸி படத்தை விட்டுவிட்டு, தீனா, துப்பாக்கி, ஏழாம் அறிவு பட கதைகளையே சொல்லி கொண்டிருக்கிறார்..

மதராஸி படத்தின் கதையை சொல்ல வேண்டாம் என்றாலும், அப்படத்தை பற்றின மற்ற விஷயங்களை பற்றியாவது பேட்டிகளில் சொல்லலாம்.. ஆனால், அப்படி எதுவுமே சொல்லவில்லை..

மாறாக., மதராஸி படம் துப்பாக்கி 2 போன்ற படம் என்கிறார் முருகதாஸ்.. ஏற்கனவே சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கி தந்திருந்தது, பெரிய வினையாகிவிட்டது.. அப்படியானால் அடுத்த விஜய் நீங்கள்தானா? விஜய் இடத்தை பிடிப்பீர்களா? என்றெல்லாம் சிவகார்த்திகேயனை வெளுக்க துவங்கிவிட்டார்கள்..

துப்பாக்கி 2

இந்தநேரத்தில், மதராஸி படம் துப்பாக்கி 2 என்று முருகதாஸ் சொல்லிவிடவும், இதுவும் சிவகார்த்திகேயனுக்கு தலைவலியை தந்துள்ளது.,.

இந்த மதராஸி படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு பெரிய புரமோஷனும் இதுவரை தரவில்லை.. உண்மையிலேயே மதராஸி படம் சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருக்கிறதா? படம் சம்பந்தமான அதிருப்தி ஏதாவது இருக்கிறதா? ஏன் மதராஸி படத்திற்கான ஆர்வத்தை சிவகார்த்திகேயன் காட்டவில்லை? ஒருவேளை இனிமேல்தான் புரமோஷன்களை ஆரம்பிக்க போகிறார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் மாஸ்

இந்நிலையில்தான், மதராஸி படம் டிரைலர் நேற்று வெளியாகியிருக்கிறது.. அத்துடன், இந்த படம் நல்ல விலைக்கு போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது சிவகார்த்திகேயன் படங்களிலேயே மதராஸி படம் 40 கோடிக்கு விலை போயிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+