முழுசா நம்பி அடி வாங்கிட்டேன்! மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி நடிகராக பலருக்கும் பரிட்சயமான மதுரை முத்துவின் மனைவி சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோவில் "நான் முழுசா நம்பி அடி வாங்கி விட்டேன்" என்று அவர் கொடுத்த கேப்ஷன் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நகைச்சுவை நடிகராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மதுரை முத்துவிற்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை .90ஸ் முதல் இப்போதுள்ள 2கே கிட்ஸ்கள் வரைக்கும் இவருடைய ஸ்டாண்ட் அப் காமெடிக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். என்னதான் மதுரை முத்து நகைச்சுவையாக பேசி அனைவரையும் மகிழ வைத்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது.

Madurai Muthu s wife admitted to hospital

மதுரை முத்து முதல் முதலாக லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனால் மதுரை முத்துவிற்கு அந்த காதல் திருமணம் ரொம்ப நாளைக்கு நீடிக்க வில்லை. அவருடைய மனைவி 2016 ஆம் வருஷம் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். ஏற்கனவே மதுரை முத்து ஒரு முறை விபத்தில் சிக்கி இருந்த போது கூட இன்றைய கடவுளுக்காக அவர் மனைவி தலையில் மொட்டை அடித்திருந்தது குறித்து மதுரை முத்து பல நிகழ்ச்சிகளில் பெருமையாக பேசி இருக்கிறார்.

ஆனால் அவருடைய மனைவியின் இறப்பு அவரை பெரிய அளவில் பாதிப்படைய வைத்தது. அதற்கு பிறகு திருமணமே வேண்டாம் என்று இருந்த மதுரை முத்துவை அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எல்லோரும் அடுத்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்க்கைக்காக மதுரை முத்து அவருடைய முதல் மனைவி லேகாவின் தோழி நீதுவை திருமணம் செய்து கொண்டார்.

நீது ஒரு பல் மருத்துவராக இருக்கிறார். இந்த நிலையில் மதுரை முத்துவின் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தையோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சமீப காலமாகவே நீது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான ரீல்ஸ் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவர் போட்ட வீடியோ ஒன்றில், "எனக்குன்னு ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் போட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க் கொண்டே இருக்கிறேன் என்றுஸஅந்த அழுதப்படியே அந்த ரீல்ஸ் வீடியோவில் காட்சிகள் இருக்கிறது. அதுபோல இன்னொரு ரீல்ஸ் வீடியோவும் பகிர்ந்து இருக்கிறார். அதில் "எவ்வளவோ காயங்களை அவன் அவளுக்காக கொடுத்த போதிலும் கூட அவள் அவரை விட்டு பிரிந்து போக வேண்டும் என்று நினைத்ததில்லை. பலமுறை காயப்பட்ட போதும் கூட பிரிய வேண்டும் என்று துளி அளவும் நினைத்ததே இல்லை.

ஏனென்றால் இந்த உலகத்தில் மிக அதிகமாக பிடித்தது அவளுக்கு அவன் தானே..! என்று அந்த வீடியோவில் வார்த்தைகளுக்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். அதோடு ஸ்பிடலில் தன்னுடைய கையில் ட்ரிப்ஸ் ஏற்றிய பேன்டேஜ் இருப்பதை காட்டி சோகமாக ரியாக்சன் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில் தொடர்ச்சியாக நீது சோக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறாரே அப்போ மதுரை முத்துவிற்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சனையா? அதனால்தான் அவர் இப்படி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் மதுரை முத்துவின் குடும்பத்தோடு இவருக்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமோ? என்றும் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறனர். எது எப்படி இருந்தாலும் இது குறித்து மதுரை முத்து அல்லது அவருடைய மனைவி தெளிவான விளக்கம் கொடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+