Magudam Review: மகுடம் எப்படி இருக்கு? விஷால் படத்தை நம்பி பார்க்கலாமா? வேண்டாமா? அவ்வளவுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் நடித்து இயக்கி இருக்கும் மகுடம் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமையா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை விஷாலே இயக்கி இருப்பதால் அதிக ஹைப் இருந்தது. இந்தப் படத்திற்கு இயக்குநர் ரவி அரசு கதை எழுதி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று twitter ரிவ்யூ பார்க்கலாம்.

விஷாலுக்கு போன வருஷம் வெளியான மத கஜ ராஜா படம் ஓரளவிற்கு பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படம் எடுத்து பல வருடம் கழித்து ரிலீஸ் ஆனாலும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மகுடம் திரைப்படம் என்ன மாதிரி கதைக்களத்தோடு இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் இது வழக்கம் போல பழிவாங்கல் கதையாக தான் வந்திருக்கிறது.

Magudam Review

மகுடம் படத்தின் கதை

இந்த படத்தில் தந்தை, மகன் பாசத்தையும் ஹார்பர் கடத்தலையும் கலந்து கிண்டி இருக்கிறார்கள். தந்தையை வெறுக்கும் மகன் ஒருவன் மீண்டும் தந்தையை புரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதுதான் கதை இது பழைய படங்களின் கதை தான். ஆனால் இப்போ அதைத்தான் பட்டி டிங்கரிங் பார்த்து இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப கேசரியாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த கேசரியில் தித்திப்பு இருந்ததா? என்று கேட்டால் பார்ப்பதற்கு மட்டும்தான் கலர்ஃபுல்லாக இருக்கிறது என்பதுதான் பலரின் கருத்து.

மகுடம் படம் ரிவியூ

படத்தின் கதை 60ஸ்களில் ஆரம்பித்து குழந்தைகள் கடத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது. ஆனால் படத்தின் முதல் பாதி ரொம்பவும் ஆவரேஜ் ரகம் தான். செகண்ட் பாதி ஓகே ரகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சனம் கொடுத்து இருக்கிறார்கள். அப்பா, மகன் என்று இரண்டு கேரக்டரில் விஷால் நடித்திருக்கிறார். அஞ்சலி, துஷாரா இருவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் படம் முழுக்க இழுவையாக இருக்கிறது. 3 மணி நேரம் ஜவ்வாக இழுக்கிறார்கள் என்று ஒருவர் விமர்சித்து இருக்கிறார்.

ட்விட்டர் ரிவ்யூ

மேலும் ஒரு ரசிகர் படத்தை பார்த்துவிட்டு இது வெறும் ஜஸ்ட் கிராஃப்ட் இந்த படத்திற்கு முட்டை மார்க் தான் கொடுக்க முடியும், படத்தை பார்த்து தலைவலி வந்துவிட்டது என்று கழுவி ஊற்றி இருக்கிறார். அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்திருந்தாலும் சிலர் அஞ்சலி, விஷால் நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக இருக்கிறது, படத்தை விஷால் இயக்கி இருப்பதால் தன்னுடைய மொத்த திறமையும் காட்டி இருக்கிறார், ஜி.வி பிரகாஷ் இசை மூலம் பிளாஸ் செய்திருக்கிறார் எனவும் பாராட்டவும் செய்து இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+