சினிமாவில் கதாநாயகனாகும் ‘மகாநதி’ சீரியல் ஹீரோ.. அஜித் பட கதாநாயகி தான் ஹீரோயினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகன் விஜய் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சுவாமிநாதனுக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எந்த திரைப்படத்தில் நடிக்கிறார்? அவருக்கு ஜோடி யாரு என்று விரிவாக பார்க்கலாம்.
பல நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிக்க தொடங்குகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் சுவாமி நாதனும் இணைந்து இருக்கிறார். சுவாமிநாதன் இப்போது மகாநதி சீரியலில் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் விஜய் கேரக்டருக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மகாநதி சீரியல் விஜய்
அதிலும் ஆரம்பத்தில் விஜய் அறிமுகமாகும் போது காவிரியின் காதலை பிரிப்பதற்காக வருகிறாரே என்று பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது விஜய் மற்றும் காவிரியின் காதலுக்கென்று அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். கடந்த வாரத்தில் இந்த சீரியல் டிஆர்பி அதிகரித்து டாப் 10 இடத்திற்குள் வந்திருக்கிறது. அதேபோல இந்த சீரியலில் விஜய் மற்றும் காவிரி ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக இருக்கிறது.
விஜய் டிவி சீரியல் நடிகர்
அந்த அளவிற்கு விஜய்யாக சுவாமிநாதன் கேரக்டரில் ஒன்றி போய்விட்டார். இப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சுவாமிநாதன் கன்னட நடிகர், கன்னட சீரியல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமாகி இருக்கிறார். ஆனால் இவருக்கு இப்போது கன்னட திரைப்படத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சுவாமிநாதன் நடிக்கும் திரைப்படம்
அதோடு இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஹீரோயினியாக பிரியங்கா உபேந்திரா கமிட்டாகி இருக்கிறார். பிரியங்கா உபேந்திரா வேறுயாரும் இல்லை ராஜா திரைப்படத்தில் பிரியா கேரக்டரில் தயிர் சாதமாக நடித்த நடிகை தான். பிரியங்கா உபேந்திரா சுவாமிநாதன் நடிக்கும் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்கு கமரோட்டு 2 என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் வாழ்த்து
இன்னும் கூடிய சீக்கிரத்தில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதேபோல சுவாமிநாதன் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தியும் இருக்கிறது. அதாவது இந்த திரைப்படம் ஆறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. அதில் தமிழ் மொழியிலும் கமரோட்டு 2 படம் வரப்போகிறது. இதன் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது சுவாமிநாதன் நடிக்கப் போகும் இரண்டாவது பாகம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முன்னணி நடிகராக மாறுவார் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications