மகாநதி சீரியல் காவிரி யார் தெரியுமா? அழகி பட்டம் வென்றவருக்கு இப்படி ஒரு சோதனையா?
சென்னை: விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக மகாநதி சீரியல் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் ரசிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் மகாநதி சீரியலில் காவிரி ஆக நடிக்கும் நடிகை யார் என்பது பற்றியும் அவர் எப்படி சீரியலுக்குள் வந்தார் என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் மகாநதி சீரியலில் கதாநாயகி காவேரி தன்னுடைய குடும்பத்திற்காக கான்ட்ராக்ட் திருமணம் செய்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களுக்கு காவிரியின் பயோகிராபி கொஞ்சம் இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் அதை பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மகாநதி சீரியல் விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் இந்த சீரியல் நடிகர், நடிகைகளை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மகாநதி சீரியலில் காவிரி கேரக்டரில் நடித்து வருபவரின் நிஜ பெயர் லட்சுமி பிரியா தான்.
முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கும் லட்சுமி பிரியாவிற்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஆனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு காலேஜ் படிப்பை முடித்ததும் முழு நேரமாக மாடலிங் துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
அதோடு மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வாகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து சில பத்திரிகைகளில் முன் பக்க அட்டை படத்தில் இடம்பிடிக்கிற மாதிரியான போட்டோ சூட்டுகளை நடித்தி வந்து இருக்கிறார். பட வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கிய இவருக்கு சில வருடங்கள் கழித்து தான் நடிகர் யோகி பாபுவோடு சேர்ந்து பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படம் லட்சுமி பிரியாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்த நிலையில் அதை தொடர்ந்து பெரிய அளவில் இவருக்கு சினிமா வாய்ப்பு வராத போது இவர் சின்னத்திரையில் கவனத்தை திருப்பி இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை போஸ்ட் போட்டு 40 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்களை பாலோ பண்ண வைத்திருக்கிறார்.
அதுபோல லட்சுமி பிரியா யோகி பாபுவின் பன்னிக்குட்டி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் திரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தலை, ட்ரிப் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications