விஜய் டிவி சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. கையில் மகளோடு வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நிவின் கேரக்டரில் நடிக்கும் ருத்ரன் தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதை ரசிகர்களிடம் அறிவித்திருக்கிறார். இவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக சீரியலோ அல்லது சினிமாவோ அதில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படி ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்கள். வில்லனாக நடிக்கும் நடிகர்களை இப்போதும் வில்லனாகவே பார்க்கும் நிலை தான் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகன் ஆக நிவீன் கேரக்டரில் நடிக்கும் ருத்ரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

ஆரம்பத்தில் நிவினும் காவிரியும் காதலித்து வந்தனர். ஆனால் காவிரிக்கு வேறு திருமணம் முடிந்ததும் தன்னுடைய காதல் ஃபீலிங்கை கொட்டி ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்திருந்தார். அதுபோல மகாநதி சீரியல் அதிகமான புதுமுக நடிகர்கள் தான் நடிக்கிறார்கள். அதில் ருத்ரன் பிரவினும் ஒருவர். இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இந்த சீரியல் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

பிறகு சில தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் இந்த சீரியலின் கதையில் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் நிவின் காவேரிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இப்போது காவேரி இன்னொரு கல்யாணம் செய்து இருந்தாலும் அது அக்ரீமெண்ட் கல்யாணம் என்பதால் மீண்டும் காவிரி நிவினுடன் சேர்வாரா? இல்லையா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கின்றது.

அதுபோல நிவின் மற்றும் காவிரி ஜோடிக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதும் கிடைத்திருந்தது. இந்த நிலையில் நிவின் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ருத்ரன் பிரவீன் தனக்கு குழந்தை பிறந்திருப்பதை அறிவித்திருக்கிறார். கையில் பிறந்த குழந்தையை தூக்கி வைத்தபடி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று ருத்ரன் அறிவித்திருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் ருத்ரன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தாலும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை இதுவரைக்கும் அதிகமாக வெளியிட்டது கிடையாது. அதனால் இவருக்கு திருமணம் முடிந்தது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இப்போது இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை கேட்டதும் பல இளம் ரசிகைகள் இதைக் கேட்டு அதிர்ச்சியாகி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications