“மகாராஜா" பட விஜய் சேதுபதியின் மகள் இவ்ளோ சீரியல்களில் நடித்திருக்கிறாரா? மெட்டிஒலி முதல் இதெல்லாமா?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த நடிகை சச்சனா மெட்டி ஒலி சீரியலில் தொடங்கி பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியலிலும் சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகைகள் சில வருடங்களிலேயே கதாநாயகியாக மாறிவிடுவார்கள். ஆனால் மெட்டிஒலி சீரியலில் ஆறு மாத குழந்தையாக நடித்த நடிகை தான் இப்போது மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஜோதியாக நடித்திருக்கிறார். அது குறித்து ஜோதி கேரக்டரில் நடித்த நடிகை சச்சிதா முதல் முறையாக ஃபிலிமி பீட் தமிழ் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் அவருடைய ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே ஆரம்பத்திலேயே இருந்தது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி அதிகமான திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திலும் என்ன கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறாரோ? என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது திரைப்படம் வெளியான பிறகு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. படம் வெளியான நாளிலிருந்து இப்ப வரைக்கும் தியேட்டர்களில் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளத்திலும் இந்த திரைப்படம் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டிருக்கும் சச்சிதா முதல் முறையாக மெட்டிஒலி சீரியலில் தான் ஆறு மாத குழந்தையாக நடிக்க தொடங்கினாராம். அதற்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாகவே சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். பிறகு ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்திருக்கிறாராம்.
அதுபோல செங்கலம் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். அது போல முதல் முறையாக திரைப்படம் என்று பார்த்தால் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் போன்றோர் நடித்த 1947 என்ற திரைப்படத்தில் தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் மகாராஜா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் ஆடிஷனில் பல பேர் கலந்து கொண்ட போது சச்சிதா தேர்வாகி இருக்கிறார்.
ஆனால் இவர் சீரியல்களிலும் வெப் சீரிஸிலும் நடித்தது எல்லாம் இயக்குனரிடம் சொல்லவில்லையாம். 1947 திரைப்படத்தில் நடித்ததை மட்டும்தான் சொல்லியிருந்தாராம். அதுபோல இந்த திரைப்படத்தில் ஆடிஷனில் பலபேர் கலந்து கொண்ட நிலையில் கடைசியாக சச்சிதா மட்டும் இன்னொரு பெண்ணும் இறுதியில் தேர்வாகி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த விஜய் சேதுபதி சச்சிதாவை பார்த்துவிட்டு இவங்க ரொம்ப குழந்தையாக இருக்காங்க இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டாங்க என்று சொல்லிவிட்டாராம்.
ஆனால் இயக்குனர் தான் அவரிடம் இவங்கதான் நடிச்சா சரியா இருக்கும் என்று சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது சச்சிதாவிற்க்கு 18 வயது ஆகிவிட்டதாம். இப்போது எனக்கு 21 வயதாகிறது நான் காலேஜ் படிப்பையும் முடித்து விட்டேன்.
இனி தொடர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று சச்சிதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். நீங்கள் மகாராஜா திரைப்படம் பார்த்து விட்டீர்களா? உங்களுக்கு சச்சிதா ஜோதியாக நடித்தது எவ்வளவு பிடித்திருந்தது என்பதை கமெண்டில் தட்டி விடுங்க..
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications