இளைஞர்களின் இதயத்தை புரட்டி போட்ட திடீர் புயல்..ஈழத் தமிழச்சி "மைத்ரேயி ராமகிருஷ்ணன்”இவரை தெரியுமா?
சென்னை: நம்ம தமிழ் சினிமா பலவற்றில் பிற மாநில நடிகைகள் பலர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் நடிகை ஒருவர் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நடித்து பிரபலம் ஆகி கொண்டிருக்கிறார். அவர் யாருன்னு தெரியுமா?
அவர் தாங்க இலங்கை பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன். இவர் இன்ஸ்டாகிராமில் 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துக்கொண்டு அமெரிக்கன் மற்றும் பிரிட்டிஷ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கை பெண்ணாக இருக்கும் மைத்ரேயி ராமகிருஷ்ணன் எப்படி கனடாவில் குடியேறி ஒரு நடிகையாக மாறினார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். வாங்க,
தமிழ் சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் நம்முடைய கதைக்கு தகுந்த போல பல நடிகைகள் இங்கே இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து புதியது புதியதாக பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர்.
அதுபோல நம்ம தமிழ் நடிகைகளும் பிற மொழிகளில் நடிப்பது என்பது புதுசு அல்ல.. அதுவும் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பது தான். அதற்கு உதாரணமாக பல பேரை சொல்லலாம். வைஜெயந்திமாலா, வித்யா பாலன், ஸ்ரீதேவி, ஜனனி ஐயர் என பலரை சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இவங்க எல்லாம் நடிச்சது நம்ம பக்கத்து மாநில சினிமா அல்லது இந்தியாவில் தயாராகிற சினிமாவாக தான் இருக்கும்.

ஆனால் நம்முடைய தமிழ் ஒரு நடிகை ஒருவர் பிற மொழியில் மட்டுமல்லாமல் நாடு விட்டு நாடு தாண்டி நடித்து அதிகமான ரசிகர்களையும் கவர்ந்து, யார்ரா இந்த பொண்ணுன்னு வியந்து பார்க்க வைத்த நடிகை தான் மைத்திரி ராமகிருஷ்ணன். இவங்க இலங்கை தமிழ் பெண்ணு தான். இவங்க அம்மா அப்பா இலங்கையில போர் நடக்கும் போது கனடாவில் குடியேறி இருக்காங்க.
மைத்ரேயி ராமகிருஷ்ணன் படித்து வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான். நீங்க netflix பாக்குற ஆளாக இருந்தா. கண்டிப்பா அதுல இவங்க நடிச்ச அமெரிக்கன் காமெடி சீரிஸான நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) பார்த்திருப்பீங்க. இந்த சீரியஸை இயக்குனதும் ஒரு தமிழ் பொண்ணுதான்.
நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸில் நடிப்பதற்காக மைத்திரி கிட்டத்தட்ட 15,000 பேரோடு போட்டி போட்டு பிறகு செலக்ட் ஆகி இருக்காங்க. அது மட்டும் இல்ல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே அமெரிக்காவில் நடைபெற்ற டுடே என்கிற டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உலகத்தை மாற்றி அமைக்கக்கூடிய 15 சிறுமிகளில் ஒருத்தராக செலக்ட் ஆகி இருக்காங்க.

நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸில் நடிக்கும் போது மைத்ரேயின் வயது வெறும் 18 தானாம். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பல வெப் சீரிஸ்களில் பல நடிகைகளுக்கு வாய்சும் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லால் பல சீரியஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் நடித்த நெவர் ஹேவ் ஐ யுவர்( Never Have I Ever) சீரியஸின் நான்காவது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் ஒரு காட்சியில் ராஷ்மிகாவின் சாமி சாமி (புஷ்பா) பாடலுக்கு நடிகை மைத்ரேயி டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." ரொம்பவே நல்லா டான்ஸ் ஆடி இருக்கீங்க. உங்களுக்கு என்னுடைய அன்பு" என்று குறிப்பிடும் விதமாக மைத்ரேயியை டேக் செய்து பாராட்டி இருந்தார்.
அதற்கு மைத்ரேயி ராமகிருஷ்ணன் பதில் அளித்திருக்கிறார். அதில் "இனிமேல் நடனம் பற்றி எண்ணமே வராது" என்ற தொனியில் கிண்டலாக பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இதற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய தமிழ் நடிகை ஒருவர் கண்டம் விட்டு கண்டம் கலக்கிக் கொண்டிருப்பது பலருக்கும் பெருமையாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications