குக் வித் கோமாளியில் தப்பு யார் மீது? மணிமேகலையா? பிரியங்காவா? மாகாபா பகிர்ந்த விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதற்கு காரணம் பிரியங்கா என்று மறைமுகமாக கூறியிருந்த நிலையில் இதுகுறித்து இணையத்தில் அதிகமாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில் பிரியங்காவோடு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் கடந்த நான்கு சீசன்கள் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்போடு இருந்தனர். அந்த வரிசையில் ஐந்தாவது சீசனில் ஆர்வத்தோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது வெங்கடேஷ் பட் தான்.

television vijay tv manimegalai

அவர் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து சில தினங்களில் இதுவரைக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து எல்லோரும் விலகி இருந்தனர். இது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனாலும் விஜய் டிவி புது அணியினரோடு ஐந்தாவது சீசனை தொடங்கியது.

அதில் நடுவராக தாமு தொடர்கிறார். அவருக்கு துணையாக மாதம் பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரங்களில் நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் தனக்கு இந்த நிகழ்ச்சியில் சரியான மதிப்பு அங்கீகாரம் கொடுக்கவில்லை சிலர் அவர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என எங்களை மட்டம் தட்டுகிறார்கள். நான் இதுவரைக்கும் பெண் வேடம் போட்டு நடித்திருந்தாலும் கவலைப்பட்டதே கிடையாது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிலர் நடந்து கொள்வது மனதை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. நமக்கான இடம் அங்கு இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் விலகி விட்டேன் என்று சொல்லி இருந்தார். இதுவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு இரண்டு மூன்று வாரங்கள் சரியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மணிமேகலை பெரிய பரபரப்பு ஏற்படுத்தி விட்டார்.

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அது நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்திருந்தார். அதோடு எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்தேன். அதற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் நடுவராக வந்திருக்கிறேன். நான் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் அதில் என்னுடைய உழைப்பை 100% கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன்.

television vijay tv manimegalai

ஆனால் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னுடைய வேலையை பார்க்க விடாமல் குக்காக வந்து இருக்கும் ஒரு தொகுப்பாளர் தடுக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மணிமேகலை பிரியங்கா தான் என்று பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் எல்லோருக்கும் தெரியும். காரணம் இந்த சீசனில் பிரியங்கா மட்டும்தான் நம் தொகுப்பாளராக இருந்து குக்காக வந்திருக்கிறார்.

அதோடு அந்த பதிவில் நான் எனக்கு தன்மானம் தான் முக்கியம். தன்னம்பிக்கை கெடுக்கிற மாதிரி பணம், காசு, வேலை வாய்ப்பு என்று எது வந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று பெரிய விளக்கமும் கொடுத்து இருந்தார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பிரியங்கா பற்றி பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

பிரியங்கா மீது தங்களுக்கு இருக்கும் கோபங்கள் இப்போது கமண்டுகளாகவும் மீம்ஸுகளாகவும் இணையத்தில் கன்னாபின்னாவென பரவுகிறது என்ற நிலையில் பிரியங்காவோடு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் மாகாபா பேசுகையில் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. அதனால் எனக்கு அங்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலவரம் தெரியாது. அதனால் நான் இவருக்கு தான் சப்போர்ட் என்று சொல்ல முடியாது. நாம் ஒரு காட்டுக்குள் ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நாம போய் அதில் தடுக்க முடியாது.

television vijay tv manimegalai

அப்படி தடுத்தால் நமக்கே பிரச்சனையாகும். அந்த யானைகள் நம்மை தூக்கிப்போட்டு கொன்றுவிடும். அதுபோல பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே போனது அவருடைய கருத்து. அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கழுவுற மீனில் நழுவுற மீனாக மாகாபா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+