மாகாபா ஆனந்திற்கு இவ்வளவு பெரிய பெண்ணா? வெளியான குடும்ப புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியின் மூலமாக பிரபலமான மாகாபா ஆனந்த் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மாகாபாவும் ஒருவர். விஜய் டிவியில் இவர் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றாலும் அதில் விதவிதமான கண்ணாடியை போட்டுக்கொண்டு கோட்டு சூட்டுடன் வலம் வரும் மாகாபா வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார்.

அதை தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு போன்ற படங்களிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தாலோ என்னவோ சினிமா அதிர்ஷ்டம் இவருக்கும் அடுத்து இருந்தது. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பிருக்கு ஒரு முக்கிய அதிர்ஷ்டமே என்னுடைய மனைவிதான் என்று பேட்டிகளில் மாகாபா கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் சுவர்களில் வால்போஸ்டர் எல்லாம் ஒட்டி இருக்கிறாராம்.
அதோடு மாகாபாவிற்கு விஜய் டிவியில் சினிமா காரம் காபி என்ற நிகழ்ச்சி மூலமாக தான் அவருடைய திறமை வெளியே தெரிய வந்திருக்கிறது. ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்ல மப்புல பாடல் ஒளிபரப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர்தானம். அதுபோல பல நிகழ்ச்சிகளில் மாகாபா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

ஒரு விருது வழங்கும் விழாவில் கூட மாகாபாவிற்கு விருது விளங்கும் போது அவருடைய மனைவிக்கு கண்ணீரோடு நன்றி சொல்லி இருந்தார். ஒரு கலகலப்பான பேச்சாளராக விஜய் டிவி ரசிகர்களுக்கு மாகாபாவை தெரியும், ஆனால் இவர் ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இது பலருக்கும் தெரியாது.
இந்த நிலையில் மாகாபா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாகாபாவின் மகள் அவருடைய தோள்களுக்கு வளர்ந்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications