சங்கீதா குழந்தைகளோடு விஜய் வீட்ல தான் இருக்காங்க! ஆனா அவங்களுக்கு இது பிடிக்காது!- மேக்கப் ஆர்டிஸ்ட்
சென்னை: நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டதாகவும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற வதந்தி பரவி வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக பிரபலமாக இருந்தாலே அவர்கள் பற்றி பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டே இருக்கும். அது சினிமா பிரபலங்களுக்கு சொல்லவே வேண்டாம். அதிலும் இப்போது நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் மாறி இருக்கிறார்.

அதனால் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. அதற்கு எல்லாம் விஜய் எந்த இடத்திலும் ரியாக்ட் செய்யவில்லை. இது வதந்திகள் பரப்புவர்களுக்கு மேலும் பிளஸ் ஆக இருக்கிறது. அதனால் விஜய் பற்றி நாளுக்கு நாள் பல வதந்திகள் பரவி வருவதை பார்த்திருக்கிறோம்.
அதிலும் சமீபத்தில் விஜய் அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் விஜய்யும் அவருடைய மனைவியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகிறது. விஜய் அவருடைய பிள்ளைகளோடு இல்லை, அதனால் தான் அவருடைய பிள்ளைகளின் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட விஜய் கலந்து கொள்வது கிடையாது என்றெல்லாம் கூட சிலர் கூறி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மேக்கப் ஆர்டிஸ்ட் விஜி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் விஜய் சாரோட பெரிய ரசிகை. அவருடைய வீட்டுக்கு போயிட்டு அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது. அவருடைய வீட்டில் அவருடைய மனைவி மற்றும் பையனை எல்லாம் நான் பார்த்தேன்.
ஆனால் விஜய்யை மட்டும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. நான் விஜய் வீட்டிற்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்கு சங்கீதா மேமுக்கு மேக்கப் செய்ய போயிருந்தேன். ஒரு நிகழ்ச்சி லீலா பேலஸில் நடந்தது. அன்னைக்கு விஜய் சாரோட மகனையும் பார்த்தேன். அப்போ எனக்கு எங்கேயோ பறக்கிற மாதிரி இருந்தது.
அதுபோல சங்கீதா மேம் ரொம்பவும் ஜோபியலா இருந்தாங்க. முதலில் என்னை லாபியில் வெயிட் பண்ண சொல்லி இருந்தாங்க. நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ நீங்க தானே விஜி வாங்க என்று சங்கீதா மேம் உள்ளே வர சொன்னாங்க. அப்போ எனக்கு உடனே அவங்கள கண்டுபிடிக்க முடியல.
காரணம் நான் எப்பவாவது ஒருமுறைதான் அவங்கள சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. அதனால் இது அவங்கதானா? என்று எனக்கு கொஞ்சம் குழப்பம் இருந்தது. அவங்க ரொம்ப கூல் டைப் அவங்க ரொம்பவும் மேக்கப் போடுறது கிடையாது. அதுபோல இரண்டாவது நாளும் விஜியை கூப்பிடுங்கன்னு அவங்கதான் சொல்லி இருக்காங்க.
முதல் நாள் பிடிக்கலை என்றால் நான் மேக்கப் எடுத்து விடுவேன் என்று சொல்லிட்டே இருந்தாங்க. ஆனால் எனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நடிகை அதிதி தான். அவங்க அக்கா கல்யாண நிகழ்ச்சிக்கு தான் நான் சங்கீதா மேமுக்கு மேக்கப் போட்டேன் இரண்டாவது நாள் வீட்டுக்கு கூப்பிட்டாங்க.
அப்போ விஜய் சாரோட வீட்டின் கேட்டை பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிரமிப்பா இருந்தது. எனக்கு இருந்த உணர்வு சின்ன வயசுல இருந்தே விஜய் ரசிகர்களாய் இருப்பவர்களுக்கு தெரியும். அப்புறம் உள்ளே போயிட்டு சங்கீதா மேம்க்கு மேக்கப் எல்லாம் முடிச்சுட்டு வந்தோம்.
நான் ரொம்ப பீல் பண்ண விஷயம் என்னன்னா சங்கீதா மேம் கூட ஒரு போட்டோ கூட எடுக்கல என்பதுதான். ஆனால் அதற்கு முன்பே அதிதி என்கிட்ட சொல்லும் போது சங்கீதா மேம் ரொம்ப பப்ளிக்கா இருக்க விரும்ப மாட்டாங்க, அதனால வீடியோ எதுவும் எடுக்காதீங்க என்று சொல்லிட்டாங்க என அந்த பேட்டியில் விஜி பேசி இருக்கிறார். இதனால் விஜயுடன் சங்கீதா ஒரே வீட்டில் இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. அவர்கள் இருவர் பற்றியும் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அந்த பேட்டி அமைந்திருக்கிறது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications