காதல் குஸ்தி... ஆஹா ஐஸ் கட்டி... அடடா அடடா.. ஆரா மலர் லவ்வு!
சென்னை: விஜய் டிவியில சின்னதம்பி சீரியலில் ஒரு வழியா சின்னத்தம்பி தன்னோட அப்பா அம்மாவுக்கு சூப்பரா 60ம் கல்யாணம் நடத்தி முடிச்சுட்டார்.
கல்யாணத்தை நல்லபடியா முடிச்சதும் சின்னத்தம்பிக்கும், நந்தினிக்கு வாழ்த்துக்கள் குவியுது. வீட்டுக்குஅதாவது தன் மனைவி நந்தினிக்கு கூட தெரியாம குஸ்தி போட்டிக்கு போயி பணம் ஜெயிச்சுதான் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் செய்து வைக்கறான் சின்னத்தம்பி.
60 கல்யாணம் ரொம்ப ஜாலியா கொண்டாடி முடிச்ச நிலையில், எல்லாரும் இப்போ சாதாரண நிலைக்கு திரும்பிட்டாங்க. இப்போதான் காதல் குஸ்தி..

காதல் குஸ்தி
என்ன நீங்க குஸ்தியில அவ்ளோ பெரிய ஆளா, எங்கே என்கூட குஸ்தி போட்டு ஜெயிங்க பார்ப்போம்னு நந்தினி புருஷன் சின்னத்தம்பியை வம்புக்கு இழுக்கறா. அதெல்லாம் ரொம்ப கஷ்டம் நந்தினி..ஒரு புடி புடிச்சா நீ தாங்க மாட்டேன்னு சொல்றான்.

குஸ்தி
பொண்ணுங்க கூட எப்படி குஸ்தி போடணும் அப்படி போடுங்க.. யாரு ஜெயிக்கறாங்க பார்ப்போம்னு சொல்றா. தயாராகிறான் சின்னத்தம்பி முதலில் இரு உள்ளங்கைகளையும் இரு கைகளில் தாங்கிப் பிடித்து, இருவரையும் ஒருவரை ஒருவர் ஸ்ட்ராங்கா நின்னு தள்ளிக்கறாங்க..

மாமா
நந்தினி ஒரு கையை வளைத்துப் பிடித்து, அவனை தனது முன்புறம் நிற்க வச்சுடறா. அதாவது, முன் புறமாக அவளது அணைப்பில் இருக்கான்.. அவள் தனது கையை அவனது இடுப்பில் வைத்து இறுக்கிப் பிடிக்க.. துள்ளிக் குத்திக்கறான் சின்னத்தம்பி. அப்போதான் நந்தினி மனசுக்குள் சொல்றா இது காதல் குஸ்தி மாமா.. நீ தப்பிக்க முடியாதுன்னு.

சின்னத்தம்பி தோல்வி
காதல் குஸ்தியில் சின்னத்தம்பியை வளைத்து பெட்டில் தள்ளிவிடறா நந்தினி. விடு நந்தினி நீதான் ஜெயிச்சேன்னு சொல்றான் சின்னத்தம்பி. இப்போ ஐஸ் கட்டியை அவன்மீது போட அவன் துள்ளுகிறான். பின்னர் ஐஸ் கட்டியை நந்தினி மீது போட்டு விளையாடறான் சின்னத்தம்பி.

குறிஞ்சி மலரே
மலரே.. குறிஞ்சு மலரேன்னு பாடிகிட்டு, காதலி மலரின் அறைக்குள் வர்றான் ஆரா. அவள் ஏதோ யோசனையில் ரவிக்கைக்கு ஹூக் தச்சுகிட்டு இருக்கா. என்ன மலர் உம்முன்னு இருக்கன்னு ஆரா கேட்க, தினம் என் ஜாக்கெட்டை காயப்போட்டு எடுக்கறப்போ, அதுல ஒரு ஹூக் காணாம போயிருது.. இந்த வேலையை யாரு பார்த்ததுன்னு யோசிக்கறேன்னு சொல்றா...

தகரமாகும்
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு மீட்டினால் சின்ன தகரம் கூட தங்கமாகும்னு பாடிகிட்டு, உன் நினைவா மாமன்தான் எடுத்து வச்சேன்னு சொல்றான். அது மட்டுமா.. இதோ பாருன்னு அவ தூக்கி எறிந்த தலைமுடி, குளிச்சுட்டு வச்ச பாதி சோப்புன்னு பல சேகரிச்சு வச்சிருக்கான். இவ்ளோ காதல் என் மேல வச்சிருக்கியே ஆரா... நம்ம கல்யாணம் நிஜமா நடக்குமான்னு அவனைக் கட்டிக்கறா மலர்.
இப்படி 60ம் கல்யாண வீடாயிருந்த சின்னத்தம்பி சீரியல் இப்போ, ஒரே ரொமான்ஸ் வீடா மாறிப் போயிருக்கு.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications