சில நடிகர்கள் முகமூடி அணிந்து நல்ல பேரு வாங்குறாங்க! ஆனால், கேமராவுக்கு பின்னாடி.. மாளவிகா மோகனன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகையான மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர்கள் பலர் நல்ல பெயர் வாங்குவதற்காக கேமரா முன்பு பெண்கள் பற்றி பெருமையாக பேசுவார்கள் ஆனால் கேமராவுக்கு பிறகு வேற மாதிரி நடந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். போட்டோ சூட் மூலமாக சோசியல் மீடியாவில் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்துகிறார். அதே நேரத்தில் சில நேரங்களில் சர்ச்சை கருத்துக்களையும் பேசி விடுகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் தொப்புளை காட்ட தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அதை பெரிதாக்கி புகைப்படங்களை பார்க்கிறார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.

Malavika Mohanan Serial Actress

மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

அதை தொடர்ந்து இப்போது அவர் சினிமா நடிகர்கள் குறித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது சினிமாவில் சமத்துவமின்மை அதாவது ஆண் அதிகம் எப்போதுமே முடியாது என்று நான் நினைக்கிறேன். சில நடிகர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். கடந்த 5,6 ஆண்டுகளில் பல நடிகர்களிடம் இதை நான் பார்த்திருக்கிறேன்.

எல்லாமே நடிப்பு

பெண்கள் பற்றி கேமரா முன்பு பேசும் போது அவர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். காஸ்டிங் கவுச் போன்ற சிக்கல்கள் வரும்போது அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு எப்படி பேச வேண்டும், எப்படி முகமூடி அணிந்து கொண்டு இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிகிறது.

Malavika Mohanan Serial Actress

முகமூடி அணிந்த நடிகர்கள்

பெண்களை சமமாக பார்ப்பவர்கள், மிகவும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் தான் பெண்ணியவாதி போல தோன்றுவதற்கு என்னென்ன வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியும். அதுபோல அவர்கள் யாரும் இல்லாத போது எப்படி பெண் வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன் என்று மாளவிகா மோகனன் பேசி இருக்கிறார். ஆனால் இதுபோன்ற நடிக்கும் நடிகர்கள் யாரெல்லாம் என்று மாளவிகா மோகனன் சொல்லவில்லை. அது குறித்து ரசிகர்கள் யார் அந்த நடிகர்கள் என்ற பெயரை வெளியே சொல்லலாமே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+