9 வருட காதல்! ‘பறந்து போ’ நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு எளிமையான திருமணம்! கணவர் இந்த இசையமைப்பாளர் தான்!
சென்னை: மலையாளத் திரையுலகில் கவனம் ஈர்க்கும் இளம் நடிகைகளில் ஒருவரான கிரேஸ் ஆண்டனி, தனது நீண்ட நாள் காதலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பறந்து போ படத்தின் மூலம் பரிச்சயமான கிரேஸ் ஆண்டனிக்குத் திருமணம் நடந்துள்ள தகவல், சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.

பறந்து போ - ஒரு காதல் கதை
இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பறந்து போ திரைப்படம், மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்தப் படம் வெளியான இரண்டே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தின் கதைக்களம், இளம் வயதினரின் காதல் மற்றும் மனநலப் பிரச்சனைகளைச் சுற்றியே நகரும். இந்தப் படத்தில், கிரேஸ் ஆண்டனி தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
யார் இந்த கிரேஸ் ஆண்டனி
முளந்துருத்தி தெட்டாலிக்கல் ஹவுஸில் பிறந்த கிரேஸ் ஆண்டனி, 2016ஆம் ஆண்டு ஹேப்பி வெட்டிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். கும்பளங்கி நைட்ஸ், ரோஷாக், நாகேந்திரனின் ஹனிமூன், அப்பன், நுணாக்குழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
9 வருட காதலுக்குப் பிறகு திருமணம்
கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 9 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். கொச்சியில் உள்ள லேடி ஆஃப் டோலர்ஸ் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் மிக எளிமையாக, ஒளி, ஒலி, கூட்டம் இல்லாமல் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிரேஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஏபி டாம் சிரியக்
ஏபி டாம் சிரியக் ஒரு திறமையான இசையமைப்பாளர். இவர், பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு மியூசிக் புரொடியூசராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாவாடா (2016) படத்திற்கு இசையமைத்த இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஆஃபிசர் ஆன் டியூட்டி, நரிவேட்டை, லோகா போன்ற படங்களில் பணியாற்றிய இவர், சர்வதேச நெட்ஃபிளிக்ஸ் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.
கிரேஸ் ஆண்டனி மற்றும் ஏபி டாம் சிரியக் ஆகிய இருவரும் தங்களது துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள். 9 வருடக் காதலுக்குப் பிறகு, திருமணம் செய்து கொண்ட இந்த அழகான ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவர்கள் இருவரும் இணைந்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று, என்றென்றும் மகிழ்வுடன் வாழ எங்கள் வாழ்த்துகள்!












Click it and Unblock the Notifications