முகமது குட்டி “மம்முட்டி”யாக மாறிய கதை தெரியுமா? சூப்பர் ஸ்டாருக்கு பள்ளியில் நடந்த “அந்த” சம்பவம்
சென்னை: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு மம்முட்டி என பெயர் வர காரணம் என்ன? என்கின்ற சம்பவம் சுவாரசியமாக இணையத்தில் சுற்றி வருகிறது.
பல நடிகர்கள் தங்களது ஒரிஜினல் பெயரை ஏதோ ஒரு காரணத்திற்காக சினிமாவுக்காக மாற்றி அறிமுகமாகி இருந்தாலும் மம்முட்டி பெயருக்கான காரணம் கொஞ்சம் சற்று வித்தியாசமானது தான்.

மம்முட்டி என்ற பெயர் அவராக வைத்துக்கொண்ட பெயர் இல்லை தானாக அமைந்த பெயர் என்பதுதான் அந்த சுவாரசியமே...இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம்முடைய தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் துவங்கி விஜயகாந்த், சூர்யா என்று பல முன்னணி நடிகர்கள் தங்கள் உண்மையான பெயரை சினிமாவிற்காக மாற்றி உள்ளனர். நடிகர்கள் மட்டுமின்றி பல நடிகைகளும் தங்களது ஒரிஜினல் பெயரை வெளியில் இதுவரை பெரிதாக வெளிப்படுத்தியதில்லை. இதற்குக் காரணம் நியூமராலஜி, ஜோசியம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் பிரபல மலையாள நடிகர் மம்முட்டிக்கு மம்முட்டி என பெயர் வைத்தது அவரது பள்ளி நண்பர் தான் என்கிற விஷயம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பிறந்த பொழுது இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில்.
ஆனால் பள்ளிக்காலத்தில் தனக்கு வைத்த பெயரை பிடிக்காத மம்முட்டி சக நண்பர்களிடம் தனது பெயரை ஓமர் என்றும் ஷெரிப் என்றும் கூறிக் கொள்வார். பள்ளியில் வெகு நாட்களாக எல்லோரிடமும் தன்னுடைய பெயரை ஓமர் என்றும் ஷெரிப் என்றுமே பலரிடம் கூறிவந்துள்ளார் மம்முட்டி. இதனால் இவரது சக பள்ளி மாணவர்கள் இவரது பெயரை ஓமர் ஷெரிப் என்றே நினைத்து அப்படியே அழைத்தும் வந்துள்ளனர்.
ஒரு நாள் ஓமர் ஷெரிப்பாக எல்லோரும் நினைத்திருந்த முகமது குட்டியின் பள்ளி அடையாள அட்டை தவறி கீழே விழுந்து விட அதை எடுத்த ஒரு மாணவன் அடையாள அட்டையை பார்த்துவிட்டு 'டேய்.. உன்னுடைய பெயர் முகமது குட்டியா..?? இவ்வளவு நாளா.. எங்களை ஏமாற்றி விட்டாயா..!! என்றும் முகமது குட்டியை சுருக்கி மம்முட்டி என்று பட்ட பெயர் வைத்து கோபமாக கத்தியுள்ளான். அன்றிலிருந்து சக பள்ளி மாணவர்கள் முகமது குட்டியை மம்முட்டி.. மம்முட்டி... என்று கிண்டலாக அழைக்க துவங்கியுள்ளனர்.
பள்ளி சமயத்தில் அந்த மாணவன் கோபமாக கத்திய மும்முட்டி என்ற பெயர்தான் கால காலத்திற்கும் நிலைத்திருக்கும் என்று முகமது குட்டியும் நினைத்திருக்க மாட்டார். மம்முட்டி சினிமாவில் அறிமுகமான பின்பு சில படங்களில் அவரது பெயரை ஷஜில் என மாற்ற முயற்சி நடந்தாலும் அந்த பெயர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல் மம்முட்டி என்ற பெயரே இன்று வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைத்து வருகிறது.
அதனால் நமக்கு சக பள்ளி நண்பர்கள் வைக்கும் பட்டப் பெயரை சாதாரணமாக நினைத்து கோபப்படவோ.. வருத்தப்படவோ....வேண்டாம். பின்னொரு காலத்தில் அதுவே நாம் மிகப்பெரிய ஆளாக வளருவதற்க்கும் அடையாளமாகவும் அமைவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications