DD Next level vs Maman 3rd day box office: மூன்றாவது நாள் ரேஸில் சந்தானத்தை முந்திய சூரி, அதுவும் இத்தனை கோடி வசூல்!
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படமும் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படம் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் பெற்றிருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் இரண்டு நாட்கள் டிடி நெக்ஸ்ட் லெவல் அதிகமான வசூல் பெற்றிருந்தாலும், மூன்றாவது நாளில் யாரும் எதிர் பார்க்காத அளவிற்கு மாமன் திரைப்படம் வசூல் பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் எல்லாம் பிரம்மாண்டமாக எடுக்கும் திரைப்படங்கள்தான் பலருடைய மனதை கவரும். வாவ் இப்படியெல்லாம் எடுத்திருக்கிறார்களே என்று வியக்க வைக்கும். அதற்காகவே அந்த திரைப்படத்திற்கு கூட்டம் அதிகரிக்கும். சில வருடங்களுக்கு முன்பு சின்ன படங்கள் தியேட்டர் பக்கமே வர முடியாது. அதையும் மீறி வந்த ரெண்டு நாள் மூன்று நாட்களில் யாரும் பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் பிளாக் ஆகிவிடும்.

சூரி vs சந்தானம்
ஆனால் இப்போது சின்ன படங்கள் தான் மக்கள் மனதில் இயல்பாக கவர்ந்து வருகிறது. பிரமாண்டமாக பொருள் செலவில் எடுக்கும் திரைப்படங்கள் கூட இப்போது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதற்கு சாட்சியாக தான் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதிக வசூல் பெற்று கலக்கிக் கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது டிடி நெஸ்ட் லெவல் திரைப்படம் மற்றும் சூரியின் மாமன் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் vs மாமன் வசூல்
இந்த இரண்டு திரைப்படத்தில் எந்த திரைப்படம் அதிக வசூல் பெற்றிருக்கிறது என்று பார்க்கலாம். அதில் முதல் இரண்டு நாட்களில் மாமன் திரைப்படத்தை விட டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமே அதிக வசூல் பெற்றிருந்தது. அதாவது மாமன் திரைப்படம் 4.13 கோடி வசூல் பெற்று இருந்த நிலையில், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் 5. 75 கோடி வசூல் செய்திருந்தது.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட வசூல்
ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்ப ஆடியன்ஸ் மாமன் திரைப்படத்திற்கு அதிகமாக ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அதனால் மூன்றாவது நாளான நேற்று சந்தானம் படத்தை விட சூரியின் படம் அதிக வசூல் பெற்றிருக்கிறது. படம் வெளியாகி மூன்றாவது நாளான நேற்று டிடி நெக்ஸ்ட் லெவல் படம் 3.30 கோடி வசூல் செய்திருக்கிறது.

மாமன் திரைப்பட வசூல்
அதேபோல மாமன் படம் 4.25 கோடியை வசூல் செய்து இருக்கிறது. முதல் மூன்று நாட்களில் டிடி லெவல் திரைப்படம் 9.40 கோடியையும் மாமன் திரைப்படம் 8. 95 கோடியையும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மாமன் திரைப்படத்தில் செண்டிமெண்ட் கலந்த காட்சிகள் அதிகமாக இருப்பதால் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமே இதை பார்க்க முடியும் என்று முதல் நாள் விமர்சனம் எழுந்தது.
உங்கள் கருத்து
ஆனால் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் காமெடி, காதல், சண்டை என எல்லாம் கலந்த கலவையாக இருப்பதும், இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக இருக்கிறது என்று கூறப்பட்டதால் அந்த திரைப்படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மூன்றாவது நாளில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் மாமன் திரைப்படம் இந்த இரண்டு திரைப்படங்களில் நீங்கள் எந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்திருக்கிறது? ஒருவேளை படத்தை பார்க்கவில்லை என்றால் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் நண்பர்களே?
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications