விஜய்யின் அரசியல் பற்றி, ஒரே வார்த்தையில் மம்மூட்டி சொன்ன பதில்.. என்ன இப்படி பேசிட்டாரு?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி சொன்ன பதில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஜய், தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் மூலம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார். மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அவரது கட்சி, இந்த தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்படும் கேள்வியாக உள்ளது.

விஜயின் அரசியல் பிரவேசம்
குறிப்பாக, விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது, தேர்தலின் கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவரது அரசியல் பிரவேசம் ஆரம்பித்ததிலிருந்தே, திமுக கட்சியை விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், இம்முறை தேர்தலில் அவர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
நடிகர் மம்மூட்டி சொன்ன பதில்
இந்நிலையில், படப்பிடிப்பு காரணமாக சென்னை வந்திருந்த மம்மூட்டியிடம், செய்தியாளர்கள் தமிழக தேர்தல் நிலைமை, கேரள அரசியல் சூழல் மற்றும் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சுருக்கமாக கூறி சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
அவரது இந்த ஒரே வரி பதில், எந்தவித அரசியல் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களுடன் பரவி வருகிறது. சிலர் இதை நேரடி கருத்து தெரிவிக்காமல் தப்பித்துச் சென்ற புத்திசாலித்தனமான பதில் எனக் சொல்கின்றனர். மற்றவர்கள், இது விஜய் உடைய அரசியலைப் பற்றி கருத்து சொல்ல விரும்பாத நிலைப்பாடு என்றும் பார்க்கின்றனர்.
பிரபலங்கள் ஆதரவு
இதற்கிடையில், விஜய்க்கு திரைப்பட துறையைச் சேர்ந்த சிலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் முடிந்த தேர்தலில் கூட , பல நடிகர்கள் நடிகைகள் விஜயை போல அவருடைய டிரஸ் கோடில் வந்து வாக்கு செலுத்தியது கவனத்தை பெற்றது. இது அவரது ரசிகர் ஆதரவு அரசியலிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.
மொத்தத்தில், மம்மூட்டியின் சுருக்கமான பதில் ஒரு சாதாரண கருத்தாக இருந்தாலும், விஜய்யின் அரசியல் பயணத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வம் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த விவாதங்கள் இன்னும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications