2 வது படிக்கற பொண்ணை.. 4 வது படிக்கற பெண்ணை அண்ணின்னு கூப்பிட சொல்லி...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் 2ம் வகுப்பு படிப்பதில் இருந்து ஒரு பெண்ணை காதலிச்ச அனுபவத்தை சுவை பட கூறினார் ஒரு இளைஞர்.
அதாவது இரண்டாம் வகுப்பு படிப்பதில் இருந்தே மனைவியை காதலிக்க ஆரம்பிச்சாராம். 4 வது படிக்கும்போது தனது 2ம் வகுப்பு படிக்கும் தங்கையிடம் காதலிக்கும் பெண்ணை அண்ணின்னு கூப்பிட்டு காதலை சொல்ல சொன்னாராம்.
அந்த தங்கையும் என்ன ஏதுன்னு தெரியாமல் அண்ணின்னு கூப்பிட்டுட்டு வந்துட்ட அடுத்த நாள் இவர் பயந்துகொண்டே இருந்தாராம்.

ஒரே பள்ளியில்
நானும் அவங்களும் ஒரே பள்ளியில் படிச்சுக்கிட்டு இருந்தோம் சார். அவங்க எப்போதும் முதல் ரேங்க்தான். எப்பவும் எனக்கு ஒரு சப்ஜெக்ட் போயிரும். குடும்பத்துல யாராவது ஒருத்தர் நல்லா படிச்சவங்க இருக்கணும்னு இன்னோருத்தர் ஆவரேஜா இருக்கணும்னு நினைச்சேன்னு சொன்னார்.

அப்பவே அப்படி
அப்போது குறுக்கிட்ட கரு பழனியப்பன் 2ம் வகுப்பு படிக்கறப்பவே தொலைநோக்கு பார்வையுடன் சிந்திச்சு இருக்கீங்க பாருங்க. குடும்பத்துல ஒருத்தர் படிச்சு இருக்கணும்னு. சரி அப்புறம்னு கேட்டார். 2ம் வகுப்பு படிக்கறப்போ லவ்வை சொல்ல தைரியம் வரல சார். 4ம் வகுப்பு படிக்கறப்போ தைரியம் வந்துச்சுன்னு சொன்னார் இளைஞர்.

லவ்வை எப்படி
லவ்வை எப்படி சொன்னீங்க என்று கேட்டபோது, என் தங்கச்சி 2ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுகிட்டே சொல்லி, அந்த பொண்ணை அண்ணின்னு கூப்பிட்டுட்டு வான்னு சொன்னேன். அதுக்கு ஒண்ணும் தெரியாது.. அது போயி அண்ணின்னு கூப்பிட்டுட்டு வந்துருச்சு. இவங்க என்னை பார்த்து முறைச்சுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் பயந்துகிட்டே இருந்தேன்.

பயந்த மாதிரி
ஆனால், நான் பயந்த மாதிரி இவங்க மிஸ்கிட்டே சொல்லலைன்னு அவர் சொன்னார். ஏன் சொல்லலைன்னு கேட்டபோது, பாவம் பொழச்சி போகட்டும்னு விட்டுட்டேன் சார்னு அந்த பெண் சொன்னார்.இந்த பெண் எம்எஸ்சி பிஎட் மேத்ஸ் டீச்சராம்.. இவரிடம் டிப்ளமோ படிச்சு மேத்ஸில் ஃ பெயிலான தான் டியுஷன் படிச்சு பாஸானதாகவும் காதலிச்சு மணந்த கணவன் சொன்னார்.
இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களுக்கு ஞாயிறு ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சி பாருங்கள்!












Click it and Unblock the Notifications