மண்டாடி பட கதை இதுதான்! 10 நிமிடம் செம! ஆனால் இந்த குறைகள் இருக்கே! ப்ளூ சட்டை மாறன் கலாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாகவே ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சூரி நடித்த மண்டான்டி திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான ரிவ்யூ சொல்லி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை youtube தளத்தில் பேசி இருக்கிறார்.

ஆரம்பத்திலேயே அவர் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் தான் தொடங்குகிறார். அதாவது இந்த படத்தின் கதை என்னன்னு பார்த்தீங்கன்னா மீனவ கிராமத்தில் பாய்மரப்படியை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். எல்லோரும் அதை போட்டியாக பார்த்தால் அந்த ஊர்லில் ஒருவர் மட்டும் வியாபாரமாக பார்க்கிறார். அவர்தான் வில்லன் அந்த ஊரை விட்டு விலகி இருக்கும் ஹீரோ இந்த விளையாட்டு நம்ம ஊரின் சொத்து அதனால நானே இந்த ஊரில் ஒரு டீமை உருவாக்கி கோப்பையை வென்று காட்டுகிறேன் என்று கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

Soori blue sattai Maran review

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ

இந்த கதையை மட்டும் பார்த்தீங்கன்னா இது கொஞ்சம் புதுசா தான் இருக்கு. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு களத்தை இதுவரை பார்த்ததில்லை ஆனா இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்லேட்டில் இருந்து தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்துல ஆஹா ஓஹோ என்கிற மாதிரி ட்விஸ்ட்களோ, ரன்னிங் பாயிண்ட்களோ இல்லாததால் வழக்கமான படம் போல தான் இருக்கிறது.

Soori blue sattai Maran review

மண்டாடி படத்தின் கதை

படத்துல பாய்மர படகு போட்டி நிறைய டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் அவங்க சொல்லுற டெக்னிக்கெல்லாம் நமக்கு புரியவில்லை. ரொம்ப அன்னியமாக இருந்தது. படத்த பாக்குற உங்களுக்கே ஒரு சந்தேகம் வரும் படத்தின் கதை படகு போட்டி அது கடலுக்குள் நடக்கிறது. ஆனால் அதற்கு கரையில் உட்கார்ந்து கமெண்டரி கொடுக்குறாங்க. அது எப்படி என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.

Soori blue sattai Maran review

படத்தின் பிளஸ் பாயிண்ட்

மஹிமா மட்டும் கலங்கரை விளக்கத்தில் ஏறி நின்று பைனாகுலரில் பார்க்கிறார். அதில் பார்த்தால் கடலில் என்ன நடக்குது என்பது தெரியும். ஆனால் இவர்களே கரையில் அமர்ந்து கமெண்டரி கொடுப்பது எப்படி என்று சுத்தமா புரியல. அதுபோல நடிகர்களுக்கு மேக்கப் கொஞ்சம் கூட செட் ஆகல. சத்யராஜுக்கு எதுக்காக இவ்வளவு கேவலமா மேக்கப் போட்டு இருக்காங்கன்னு புரியல.

சரி மொத்தத்துல படம் எப்படி இருக்குன்னு பார்த்தா கடைசி 10 நிமிடம்தான் நல்லா இருந்தது. ஆனால் அந்த பத்து நிமிஷத்துக்கு ரெண்டரை மணி நேரம் பாடி தாங்குமா? என்பது பார்க்க வேண்டும் என்று அவர் கிண்டலாகவே ரிவ்யூவை முடித்திருக்கிறார். ஆனால் படத்தின் கதையும், கடலில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் அவ்வளவு தத்ரூபமாகவும் இருக்கிறது என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+