எனக்கு ஐசு குடும்பம் உதவி செஞ்சாங்களா? எல்லாம் சுத்த பொய்.. இவ்வளவுதான் நடந்தது.. மணி எமோஷனல்
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு சிலர் இப்போது பேட்டி கொடுத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மணிச்சந்திரா பேட்டி ஒன்றில் தனக்கு ஐசுவின் குடும்பத்தினர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு உதவி செய்தார்களா இல்லையா என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மணிச்சந்திரா இருக்கும்போது நிக்சன் பற்றி ஐசு மணிச்சந்திராவிடம் பேசி இருக்கும்போது அதற்கு மணி ஐசுவுக்கு அறிவுரை கூறியிருந்தார். அதுபோல இன்னொரு இடத்தில் ஐசு மணியை எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவன் என்னிடம் சரியாக பேசவே இல்லை என்று வருத்தப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் ஐசுவின் தந்தை ஒரு போஸ்ட் போட்டிருந்தார், அது குறித்த விளக்கத்தை தான் இப்போது மணிச்சந்திரா கொடுத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போன சீசன் என்று சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த சீசன் முடிவடைந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு மட்டும் இணையத்தில் இன்னும் முடிவடையவில்லை. ஒரு பக்கம் பிரதீப்க்கு ரெக்கார்ட் கொடுத்தது இன்னும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த சீசனில் அதிகமாக பேசப்பட்டது என்றால் நிக்சன் மற்றும் ஐசுவின் நட்பை தாண்டிய விளையாட்டுகள் தான்.
இது பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் வெளியேவும் அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு முதல் முறையாக மனி சந்திரா பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவரிடம் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஐசு ஒரு முறை உங்களிடம் நிக்சன் பற்றி பேசும்போது நீங்கள் ஐசுவுக்கு அறிவுரை சொல்லி இருந்தீர்கள். அது குறித்து ஐசுவின் தந்தை வெளியே ஒரு பதிவு போட்டிருந்தார்.
அது பற்றி உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி கேட்டதற்கு, மணி அப்படியா எனக்கு தெரியாது நான் வெளியே வந்து இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி நிறைய தெரிஞ்சுக்கல. நிறைய எபிசோடுகள் இன்னும் பார்க்கல. அதுபோல யார் என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியலையே என்று கேட்க, அப்போது சிலருக்கு ஆரம்பத்தில் செய்த உதவி எல்லாம் மறந்து போச்சு என்கிற மாதிரி ஐசுவின் தந்தை நீங்க ஐசுவுக்கு அட்வைஸ் கொடுத்தபோது பதிவு போட்டு இருந்தார் என்று சொல்ல,
அதற்கு எனக்கு யாருமே எந்த உதவியுமே செய்யலையே! எனக்கு ஐசுவின் குடும்பத்தை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தெரியும். ஆனால் பெரிய அளவில் பழக்கம் கிடையாது. நான் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் என்னிடம் அவர்கள்
முன்னாடி இருந்த மாதிரி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எதுக்காக அப்படி ஒரு பதிவு போட்டாங்கன்னு தெரியல.

அதுபோல நான் ஐஸுவிடம் தவறாக எதுவும் பேசலையே அவர் நிக்சன் பற்றி என்னிடம் வந்து பேசினார் அப்போது நான் உனக்கு தவறாக படுது என்றால் நீ அவனிடம் பேசாதே என்று தானே சொன்னேன். இதில் எந்த தவறும் இருந்த மாதிரி எனக்கு தெரியலையே. எதுக்காக அவங்க அப்படி ஒரு பதிவு போட்டாங்கன்னு எனக்கு புரியல. அதுபோல நான் யாரு வீட்டிலும் தங்கி எல்லாம் இருந்தது கிடையாது என்று மணி கூறியிருக்கிறார்.
காரணம் அந்த நேரத்தில் மணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் ஐசுவின் வீட்டில் தங்கி இருந்ததாகவும் ஐசுவின் குடும்பத்தினர் மணிக்கு அதிகமான உதவிகள் செய்திருந்ததாகவும் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அதையெல்லாம் மணி மறந்துவிட்டு ஐசுவோடு பேசாமல் ரவீனா கூட பேசிக் கொண்டிருக்கிறார் என்று இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதற்கு இப்போது மணிச்சந்திரா அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications