Metti Oli Serial: இப்படி பேசி கதி கலங்க அடிக்கறானே இந்த மாணிக்கம்...!
சென்னை: சன் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருது. ஏற்கனவே பெண் பிள்ளைகளுக்கு அப்பா பாசம் ஜாஸ்தி. இந்த நிலையில், ஐந்து பெண்களை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்கி இருக்கும் அப்பா என்றால் பெண்களுக்கு தனி பாசம்தானே இருக்கும்
அப்படித்தான் மெட்டி ஒலி சீரியலில் அப்பா மீது... பிறந்த .வீட்டு மனுஷர்கள் மீது கொள்ளை பிரியமாக இருக்கிறாள் சரோஜா என்கிற சரோ. அப்பாவுக்கு முதன் முறை ஹார்ட் அட்டாக் வந்து இருக்கு. போக கூடாதுன்னு அம்மாவுடன் சேர்த்துக்கொண்டு மாணிக்கமும் பேசுகிறான்.
சரோவின் மாமா மூலம் காரியம் ஆக வேண்டும்.. அவர் தரும் பணம் வேண்டும் என்று நிலை வருகையில், அம்மா சரோகூட அன்பா நடந்துக்கோடா என்று சொன்னால் அது படி நடந்துக்கறான். இப்படி கலங்க அடிக்கிறானே மாணிக்கம் என்று பார்ப்பவர்களுக்கு கோபம்தான் வருகிறது.

தேவராஜ் மாமா
சரோவின் மாமா தேவராஜ் மூலம் கடையை விலைக்கு வாங்க வேண்டும் என்று சரோவிடம் நைசாக பேசி தாஜா செய்கிறான். அவளும் மாமாவிடம் பேசி முதலில் மாணிக்கத்துக்கு வேலை வாங்கிக் கொடுத்தாள், அடுத்து, மாமாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி கடையையும் வாங்கித் தர மாமாவிடம் பேசுகிறாள்.

அம்மா பேச்சு
மாணிக்கத்தின் அம்மா எப்போதும் மருமகள் சரோவிடம் வெடுக் வெடுக் என்று பேசும் மாமியாராகவே இருக்கிறார். அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு.. அதனால் அப்பாவை பார்க்க போகணுமென்றால், இப்போ என்ன அவசரம்.. அப்புறம் போயிக்கலாம் என்று முட்டுக்கு கட்டை போட்டு விடுகிறார். இதனால் பாசம் மிகு பெண்ணாகத் துடித்துப் போகிறாள் சரோ.

கடையை முடிக்க
தேவராஜ் மாமா கடையை பேசி முடித்து, கை எழுத்து போட வேண்டும் என்றால், இது சரோவின் அப்பா முன்னிலையில்தான் நடக்க வேண்டும். அவர் ராசியானவர் என்று சொல்லி, உன் மாமனாரை அழைச்சுட்டு வந்துரு மாணிக்கம் என்று சொல்ல, அப்போது வந்து உன் அப்பாவை பார்த்துட்டு வரலாம் வா சரோன்னு கூப்பிடுகிறான்.

இல்லைங்க வரலை
என்னங்க சொல்றீங்க.. ஒரு மனுஷர் ஆஸ்பிடலில் கிடக்கறார்.. அப்போ வந்து பார்க்க போலாமான்னு கூப்பிட்டேன்.. வேணாம்னு சொல்லிட்டு, இப்போ கூப்பிடறீங்க? . இல்லைங்க. நான் வரலை என்று தன்மானத்தோடு பேசுகிறாள் சரோ. இனிமேல் உன் கூடஜோடியா உன் அப்பா வீட்டுக்கு வருவது கனவிலும் நடக்காதுடி என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் தனியாக போய்விட்டு வந்துட்டான் மாணிக்கம்.

இப்போதும் இப்படி
மாணிக்கத்தின் அம்மா.. டேய் உனக்கு காரியம் ஆகணும்னா சரோகிட்ட அன்பா நடந்துக்கோடா.. அவளை அப்பா வீட்டுக்கு அழைச்சுட்டு போன்னு சொல்ல, அப்போதும் மாட்டேன்னு சொல்றா சரோ உடனே கர்ப்பமாகி விடுகிறாள். இனி பஸ்ஸில் பயணிக்க வேண்டாம் என்று மாமியார் சொல்ல, நல்ல வேளை.. சரோ.. உன்கிட்ட போட்ட சவாலில் எங்கே நான் தோற்றுப் போவேனோன்னு நினைச்சேன்.. இனி நம்ம ஜோடியா உங்க அப்பா வீட்டுக்கு போக வேணாம் இல்லைன்னு சொல்லி சரோவை கதி கலங்க அடிக்கிறான்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications