அண்ணாமலையை முதல்வராக்காமல் விடமாட்டேன்! கிண்டலா பண்றீங்க! நாக்கை மடித்து பட்டிமன்றம் மணிகண்டன் சபதம்
சென்னை: பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் சமீபத்தில் பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் மணிகண்டன் பேசுகையில் பாஜகவுக்கு ஒரு மணிகண்டன் வந்து விட்டேன்.. இனி விடமாட்டேன். அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் முதல்வர் என்று நாக்கை மடித்து துள்ளி குதித்து பேசிய வீடியோ இப்போ இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரம் நெருங்கி விட்டால் மேடை நிகழ்ச்சிகளில் சில சுவாரசியமான காட்சிகள் நடைபெறுவது இயல்புதான். அதை ஒரு சிலர் ட்ரோல் செய்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். அந்த வகையில் தான் இப்போது பட்டிமன்ற பேச்சாளர் பாஜகவை ஆதரித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பட்டிமன்றத்தில் நகைச்சுவையாகவும் கருத்தாகவும் பேசி பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் மணிகண்டன் சமீபத்தில் பிஜேபிக்கு ஆதரவாக திமுகவை எதிர்த்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ தான் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் மணிகண்டன் பேசுகையில் இன்னைக்கு இலங்கையில் பிச்சை எடுக்கிறான்... பங்களாதேஷில் சாகுறான்..
ஆனா இந்தியா இப்படி கட்டமைப்போடு இருக்க காரணம் மோடி தான்... கைதட்டுங்கள் விளக்கேத்துங்கன்னு சொன்னா கிண்டல் பண்ணுறாங்க... உங்களுக்கு மட்டும்தான் வெற்றி கொண்டாட தீப்பொறி ஆறுமுகம் இருக்கான்னு நினைக்காதீங்க... பிஜேபிக்கு ஒரு மணிகண்டன் வந்துட்டேன்டா.. விடமாட்டேன். எனக்கு என் உடம்பெல்லாம் எரியுது... ஓட்டை யாருக்காவது மாத்தி போட்டீங்க... (உதட்டை கடித்த படி ஆள்காட்டிக்கு விரலை ஆட்டி ஆட்டி மிரட்டியபடியே) நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்ல அங்கிருப்பவர்களே சிரிக்கிறார்கள்.
அதை தொடர்ந்து பேசிய மணிகண்டன் முடியல... ஏன்னா இஸ்ரேவில் சண்ட வரும் போது அவர் பிள்ளைகளை காப்பாற்றிய போது இஸ்லாமியர் என்று பார்க்கவில்லை. கிறிஸ்தவர்னு பார்க்கல, முதலியார்னு பாக்கல, செட்டியார்னு பாக்கல, தேவர் என்று பார்க்கல, ஆதிதிராவிடர்னு பாக்கல இந்திய பிள்ளைகள் என்று நம்ம பிள்ளைகள் என்று நினைத்த தலைவர் வேணுமடா என்று நெஞ்சிலும் வயிற்றலும் அடித்துக்கொண்டு
போடுங்கடா ஓட்டு.. என்று கெஞ்சியது போல பேசுகிறார்.
வச்சு செஞ்சுருக்கானுங்க
— கல்கி குமார் (@kalgikumaru) March 18, 2024
😂😂😂#Tamilnadu_Rejects_bjp#தட்டேந்தி_நிம்மி pic.twitter.com/7j8u9rg30y
பிறகு அண்ணாமலை கையில் தமிழ்நாட்டை ஒப்படைக்காமல் நான் சாக மாட்டேன் என்று அவர் கத்திய படியே சொல்லிக் கொண்டிருக்க இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் இதற்கு பழைய காமெடி நடிகர் ஓமக்குச்சி ரியாக்ஷனை வைத்து இவரோட வீடியோவில் கலாய்த்து வருகிறார்கள். இவர் பேசிய ஒவ்வொரு ரியாக்ஷனுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து கவுண்டர் லைன்களை எடுத்து கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications