குக் வித் கோமாளியிலிருந்து விலகிய மணிமேகலை! இன்றுதான் கடைசி எபிசோட்! இனி வரமாட்டேன்! என்னாச்சு?
இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என மணிமேகலை அறிவித்துள்ளார்.
சென்னை: இனி குக் வித் கோமாளி ஷோவில் நான் வரமாட்டேன். இன்று எனது கடைசி எபிசோட் என கோமாளி மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசனில் முதல் சீசன் அதாவது 2019 ஆம் ஆண்டு முதல் கோமாளியாக வந்தவர் மணிமேகலை. இவர் அந்த செட்டில் செய்யும் லூட்டி, இவருடைய கண்களின் எக்ஸ்பிரஷன் , பாடி லாங்குவேஜ் என இவர் ஒரு காமெடியனாகவே வலம் வந்தார்.
இவர் பேசினாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு மக்களின் மன காயங்களுக்கு மருந்து போட்டு வந்தார். கடந்த குக் வித் கோமாளி சீசன் 2 வில் மணிமேகலைக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தனர். இந்த நிலையில் அவர் 2021 ஆம் ஆண்டு அந்த சீசனில் இரு வாரங்களுக்கு கலந்து கொள்ள முடியாது என அறிவித்தார்.

யூடியூப் சேனல்
இதை தனது யூடியூப் சேனல் மூலம் கணவர் உசேனுடன் வந்து அறிவித்தார். மணிமேகலை தனது வீட்டில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்ற முயற்சித்தார். அப்போது வெந்நீர் மொத்தமாக மணிமேகலையின் காலில் விழுந்ததாம். இதனால் காலில் கொப்புளம் ஏற்பட்டு மொத்தமாக தோல் பிரிந்து வர தொடங்கியுள்ளது.

ரெஸ்ட்
மருத்துவரின் அறிவுரைப்படி மணிமேகலை ரெஸ்ட் எடுத்து வந்தார். பின்னர் இரு வாரங்களுக்கு பிறகு மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 2 ஷோவிற்குள் வந்தார். வழக்கம் போல அட்ராசிட்டிதான், கடந்த சீசனில் கூட மணிமேகலை குக் சந்தோஷுடன் ஒரே கலாட்டாதான். தற்போது 4 ஆவது சீசனில் வாட்ட சாட்டமாக இருக்கும் காளையன் பார்த்து மணிமேகலை பயந்தவர் போல் நடிப்பார்.

ரசிகர்கள்
இதையும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். உசேனை மணிமேகலை காதல் திருமணம் செய்து கொண்டார், வீட்டின் எதிர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். உசேன் நடன இயக்குநராக உள்ளார். எங்கோ ஒரு இடத்தில் இருவரும் வீட்டை கட்டி வருகிறார்கள்.

புகைப்படம்
அதன் புகைப்படத்தையும் மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இனி குக் வித் கோமாளி ஷோவில் நான் இருக்க மாட்டேன் என்றும் இன்றுதான் எனது கடைசி எபிசோடு என்றும் மணிமேகலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குக் வித் கோமாளியில் இன்றுதான் எனது கடைசி எபிசோடு.

அளவில்லாத அன்பு
நானே வருவேன் கெட்டப்பில் இருந்து நான் வரமாட்டேன் என அறிவிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த குக் வித் கோமாளி முதல் சீசனிலிருந்து என் மீது ரசிசர்கள் அன்பை பொழிந்தீர்கள். உங்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறோன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கவலை
இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். ஏற்கெனவே இந்த ஷோவில் பாலா இல்லை, சிவாங்கியோ குக் ஆகிவிட்டார். மணிமேகலையும் போய்விட்டால் புகழுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை காண வேண்டும். ஒரு வேளை புகழுக்கும் சினிமா படம் கிடைத்து இடையே ஷூட்டிங் சென்றுவிட்டால் என்ன செய்வது? ஏதோ இந்த நிகழ்வு ஸ்ட்ரெஸ் பர்ஸ்ட்டராக இருந்தது. யார் கண்ணு பட்டுச்சோ!












Click it and Unblock the Notifications