பிக் பாஸ் போட்டியாளருக்கு சப்போர்ட் தெரிவித்து மணிமேகலை பதிவு.. மாறாத குக் வித் கோமாளி நட்பு
சென்னை: தொகுப்பாளராக பிரபலமான மணிமேகலை நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி போட்டியாளர் ஒருவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் தன்னோடு கலந்து கொண்ட நடிகை சுருதிகா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தன்னுடைய சப்போர்ட்டை தெரிவித்து இருக்கும் நிலையில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழைப் போலவே ஹிந்தி பிக் பாஸும் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் தமிழ் நடிகையாக இருக்கும் சுருதிகா கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகை சுருதிகா நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்ரீ படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி கொடுக்காததால் இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தொடங்கியது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் சுருதிகா கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சப்போர்ட் பண்ணியது போல மீண்டும் ஒரு டிவி ஷோக்கு நான் போகப் போகிறேன் அதற்கும் நீங்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இவர் தமிழில் கலந்து கொள்ளாமல் ஹிந்தியில் கலந்து கொண்டிருக்கிறார்.ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிலையில் அங்கு தமிழ் நடிகையாக சுருதிகா களம் இறங்கி இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் பிக் பாஸில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் இருக்கும் நிலையில் இவர் இங்கிருந்து தப்பித்து தெலுங்குக்கு போய் இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். அதுபோல சுருதிகாவோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தோழியாக மாறிய மணிமேகலை நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுருதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை அதிகமாக பேசப்பட்ட போது மணிமேகலைக்கு எதிராக பல விஜய் டிவி பிரபலங்கள் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சுருதிகா பேட்டிகளில் கூட மணிமேகலை என்னுடைய நல்ல தோழி என்று குறிப்பிட்டு இருந்தார். இப்போது தன்னுடைய தோழிக்காக மணிமேகலையும் போஸ்ட் போட்டு வாழ்த்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications