Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படி ஒரு நிலமை யாருக்கும் வரக்கூடாது! காதலுக்காக பட்ட கஷ்டம்.. திடீரென்று பேட்டியில் அழுத மணிமேகலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளராக பலருக்கும் பரிட்சயமான மணிமேகலை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று தன்னுடைய காதல் கதையை சொல்லி கண்கலங்கி அழுது இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தன் பட்ட கஷ்டங்கள் குறித்து மணிமேகலை பேசி இருந்த நிலையில் அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்தாலும் மணிமேகலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பெரிய லெவெல் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மணிமேகலைக்கு அதிகமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள் ஆனால் திடீரென்று மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி இருந்தார்.

Manimekalai suddenly cried in the interview

கோமாளியாக இருந்த மணிமேகலை மீண்டும் தொகுப்பாளராக அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் விஜய் டிவியில் அதிகமான நிகழ்ச்சிகளில் மணிமேகலை காணப்படவில்லை. அதே நேரத்தில் தான் சொந்தமாக தன்னுடைய கிராமத்தில் கட்டிக் கொண்டிருக்கும் வீடு குறித்து அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல மணிமேகலை சமூக வலைத்தளத்தில் படு பயங்கரமாக ஆக்டிவாக இருக்கிறார். தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். மணிமேகலை அவருடைய கணவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டான்ஸ் மாஸ்டராக இருந்த ஹுசைனை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயத்தை பற்றி பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

ஆனாலும் தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட போது தங்களுக்கு இரண்டு குடும்பத்திலும் ஆதரவு இல்லாமல் இருந்த நேரத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து இப்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், நாங்கள் கல்யாணம் பண்ணினது எங்க ரெண்டு வீட்டுக்கும் பிடிக்கல. இப்போதான் என்னுடைய அம்மா என்னிடம் பேச தொடங்கி இருக்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடையாது. அந்த நேரத்தில் வீட்டு வாடகையில் இருந்து வீட்டு செலவுக்கு வரைக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். கல்யாணமான புதுசில் ஹுசைன் டான்ஸ் குரூப்பில் தான் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு 18000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதை வைத்து குடும்பத்தை நடத்திவிடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் பல இடங்களுக்கு அலைந்தோம்.

அந்த நேரத்தில் நாங்கள் இருவரும், "இந்த மாதிரி வீடு வாங்கணும்... அந்த மாதிரி கார் வாங்கணும்" என்று அதிகமாக பேசிக் கொண்டிருப்போம். அதுவெல்லாம் இப்போது எனக்கு ஒன்று ஒன்றாக நடக்க தொடங்கி இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அதற்காகத்தான் நான் அதிகமாக உழைக்க தொடங்கினேன். ஆரம்பத்தில் திருமணமான ஒரு வார சில வாரங்களுக்குள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் அந்த நேரத்தில் ஹுசைன் மோதிரத்தை அடகு வைத்திருந்தோம்.

கையிலும் கொஞ்சம் கூட பணம் கிடையாது அதற்காகத்தான் நான் உடனே நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால் அது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. நம்மை தவறாக பேசுபவர்கள் நம்முடைய உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ என்றால் அவர்களுக்கு நாம் விளக்கம் சொல்லலாம். அல்லது அவர்களை பார்க்காமல் நாம் போய்விடலாம்.

ஆனால் முகம் தெரியாத பலர் நம்மை விமர்சித்து பேசுவார்கள். அப்போதுதான் நமக்கு வேதனையாக இருக்கும். இப்போது எனக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால் நான் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொண்ட போது பலர் எங்களை தவறாக பேசியிருந்தார்கள் என்று அதை பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது கண் கலங்கி அழுதிருந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+