லண்டனில் விஜயகுமார் குடும்ப பங்க்ஷன்.. ஆனால் மஞ்சுளாவின் மகள்கள் மிஸ்ஸிங்.. கேப்ஷனை கவனித்தீர்களா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாவின் மகள் தியாவின் ரிசப்ஷன் லண்டனில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மகள்கள் குடும்பத்தினர் இல்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமார் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து இப்ப வரைக்கும் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இவருடைய கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மரியாதை உள்ளதாகவே இருந்து வருகிறது.

விஜயகுமாரை போலவே அவருடைய மகன் மற்றும் மகள்களும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜயகுமார் முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்ததில் கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் முத்து கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடல் அவரை விஜயகுமார் விவாகரத்து செய்திருந்தார். அதற்குப் பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணமும் செய்திருந்தார்.

மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். ஆனால் விஜயகுமார் தன்னுடைய இரண்டு குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இதில் நடிகை வனிதா மட்டும் தன் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு தனியாக வாழ்ந்து வருகிறார். மற்ற எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகுமாரின் வீட்டில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் சினிமாவில் நடிக்காமல் டாக்டராக மாறி இருக்கிறார்.

அனிதாவிற்கும் பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபோது அனிதாவின் அம்மா முத்து கண்ணு அனிதா படிப்பில் கெட்டிக்காரராக இருக்கிறார் அவர் படிப்பதை மட்டுமே கவனிக்கட்டும் என்று நடிப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அதனாலேயே அனிதா நடிக்காமல் டாக்டர் ஆக மாறி இருக்கிறார் என்றும் பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அனிதாவின் மகள் தியாவும் டாக்டராக இருக்கிறார். தியா தன்னோடு படித்த திலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் லண்டனில் தியா டாக்டராக வேலை பார்த்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக திலனுடன் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து லண்டனில் தியாவின் ரிசப்ஷன் நடைபெற்று இருக்கிறது.

அதில் விஜயகுமார் குடும்பத்தினர் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அருண் விஜய், அனிதா, கவிதா குடும்பத்தினர் மட்டும்தான் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் லண்டன் ரிசப்ஷனில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது லண்டன் ரிசப்ஷனில் எடுத்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதிகமானோர் பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே தியாவின் திருமணம் சென்னையில் நடைபெறும் போது ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தாவின் குடும்பத்தினர் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு பல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். இது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இப்போது பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி இருவர் குடும்பமும் லண்டன் ரிசப்ஷனில் மிஸ் ஆகி இருப்பது குறித்து அதிகமான கேள்விகள் குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய அனிதா, கவிதா என்ற இரண்டு அக்காக்களோடு எடுத்த புகைப்படத்தை அனிதா தன்னுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு, "மந்திர மூன்று நாட்கள்.. அற்புதமான கொண்டாட்டம். தூய்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு எங்களின் சில இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தியா திலனின் வரவேற்பு கொண்டாட்ட புகைப்படங்கள் என்று அனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பதிவில் விஜயகுமார் பார்க் ஒன்றில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அனிதா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு என்னுடைய அப்பா எப்போதும் ஹீரோ தான். இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் உடற்பயிற்சி மேற்கொள்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications