விஜயகாந்துக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் இதுதான்.. மனோபாலா சொன்ன பதில்.. திகைத்துப் போன கேப்டன்
சென்னை: நடிகர் விஜயகாந்த், ரஜினிகாந்த் பற்றி மனோபாலா கூறிய பதிலால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து மனோபாலா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நடிகர் மனோ பாலா சமீபத்தில் திடீர் உடல்நல குறைவால் காலமானார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய பல வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.
அந்த வகையில் மனோபாலா காமெடியாக விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் பற்றி சொன்ன விஷயத்திற்க்கு தற்போது ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், இயக்குனர் பல திறமைகளை வைத்திருந்த மனோபாலா சமீபத்தில் காலமானார். அவர் திரைத்துறையில் பல பிரபலங்களையும் தன்னுடைய youtube சேனல்களில் பேட்டி எடுத்திருந்தார் அது போல திரைத்துறையில் தான் சந்தித்த பல சுவாரசியமான தருணங்களை பற்றியும் தன்னுடைய youtube சேனல்களில் பேசி இருந்தார் அந்த வகையில் அவர் பேசிய வீடியோ இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் பற்றி தன்னிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் கூறிய பதில் சும்மா காமெடியாக பேசி இருந்தாலும் பிறகு அதை குறித்து விஜயகாந்த் என்னிடம் பேசும்போது எனக்கு சங்கடமாக இருந்தது. பிறகு விஜயகாந்தை சமாளித்து விட்டேன் என்று காமெடியாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு எப்படி ஒரு பேரும் புகழும் இருக்கிறதோ அந்த அளவிற்கு விஜயகாந்த் இருக்கும் அதிகமான செல்வாக்கு இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. கமல், ரஜினி இருவரும் பிரபலமாக இருக்கும்போது தான் விஜயகாந்த் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார். முதலில் வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜயகாந்த் தன்னுடைய நண்பர் தயாரிப்பாளரான ராவுத்தர் மூலமாக கதாநாயகனாகவும் கலக்கிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் விஜயகாந்த் வளர்ச்சியை சில சமயங்களில் ரஜினிகாந்த் பார்த்து பிரமிப்பும், எனக்கு நிகராக ஒரு நடிகர் வளர்ந்து வருகிறார் என்று திகைப்பும். அவரிடம் இருந்ததாம். இருந்தாலும் மனதளவில் போட்டிக் கொள்ளாமல் தொழில் முனையாக போட்டியாக இவர்கள் இருவருக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி இருக்கிறது.
விஜயகாந்த் வளர்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் நடிப்பை தாண்டியும் பல நல்ல செயல்கள் செய்து மக்களின் மனதை கவர்ந்திருந்தார். அதனால் தான் அவரால் அரசியலில் ஜொலிக்க முடிந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் உயர்ந்ததற்கு காரணம் அவருடைய தனித்துவமான கேரக்டர்தான். தற்போது அவர் உடல் நிலை காரணத்தால் அதிகமாக அரசியலில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வருகிறார்.

அந்த நேரத்தில் தான் மனோபாலாவிடம் ஒருவர் ரஜினிகாந்துக்கும் விஜயகாந்த்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டாராம். அதற்கு பதில் அளித்த மனோபாலா, ரஜினிகாந்த் பயங்கரமா கருப்பா இருப்பார் என்றும் விஜயகாந்த் கருப்பா பயங்கரமா இருப்பார் என்றும் பதிலளித்தாராம். ஆனால் இவர் பேசிய இந்த தகவலை அப்படியே ஒருவர் டைப் செய்து கீழே மனோபாலா என்று பெயரிட்டு விஜயகாந்த்க்கு அனுப்பி வைத்தாராம்.
அந்த நேரத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பு இருந்திருக்கிறார். கூடவே மனோபாலாவும் அந்த இடத்தில் விஜயகாந்த் உடன் தான் இருந்திருக்கிறார். அப்போது அந்த செய்தியை பிரித்துப் பார்த்த விஜயகாந்த் மனோபாலாவிடம் என்ன இது? என்று கேட்டாராம். அதற்கு மனோபாலா இது சும்மா காமெடி கதை பேசியது, விடுங்க விடுங்க என்று விஜயகாந்தை கூல் செய்தாராம். கலகலப்பாக அவர் பேசிய இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications