Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்க்க பார்க்க கஷ்டமாயிருக்கே? கங்கை அமரன் பாரதிராஜா கிட்ட பாடி.. மனோஜின் ராஜா அப்பா நட்பு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜாவை இசையமைப்பாளர் கங்கை அமரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. பாரதிராஜாவை சந்தித்த கங்கை அமரன் "கல்லுக்குள் ஈரம்" படத்தில் அவர் எழுதிய சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார். பாரதிராஜாவிடம் கங்கை அமரன் இதெல்லாம் ஞாபகம் இருக்கா? இந்த பாட்டை 10 நிமிஷத்தில் எழுதினேன். பாம்குரோவ் ஓட்டலில் பாட்டை எழுதிட்டு வா என்று சொன்னீங்களே? என்றெல்லாம் கேட்டு பழைய நினைவுகளுடன் பாடி பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் ஆறுதல் சொல்லியிருந்தார். இது வீடியோவாகவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்துக்களை உருக்கமாக சொல்லி உள்ளார்.

Aagayam Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுபைர், "எப்போதுமே திறமைசாலிகளை தேடி சென்று பாராட்டக்கூடியவர் பாரதிராஜா.. பண்புள்ள அன்பான மனிதர்.. இந்த புத்திர சோகத்திலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறாரோ தெரியவில்லை.. அந்த சோக நினைவுகளிலிருந்து மீட்டெடுக்கவே கங்கை அமரன் முயற்சி செய்கிறார்.

Television Manoj Bharathiraja Gangai amaran

பாட்டு பாடிய கங்கை அமரன்

தன்னுடைய நண்பனின் தம்பியை, தன்னுடைய தம்பியாகவே பார்ப்பவர் பாரதிராஜா.. அந்தவகையில், கங்கை அமரனும், பாரதிராஜாவை சோகத்திலிருந்து மீட்டு கொண்டுவர, சிறுபொன்மணி உட்பட பல பாடல்களை பாடி காட்டினார்.. ஆனால், என்னதான் கங்கை அமரன் பாட்டி பாடினாலும், அவரது சிந்தனை முழுவதும் மகன் நினைப்பிலேயே இருப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அப்பப்போ மட்டுமே, பாரதிராஜாவுக்கு பழைய நினைவுகள் திரும்பி திரும்பி வந்தது.. பார்க்கவே மனசு கஷ்டமாக இருந்தது..

ஆயிரம்தான் இளையராஜா, பாரதிராஜாவுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தாலும், பவதாரணி இறந்ததுமே உடனே அங்கே கிளம்பி சென்றார் பாரதிராஜா.. காரணம், பவதாரணியை தூக்கி வளர்த்தவர் பாரதிராஜா. தன் வீட்டு குழந்தையாகவே நினைத்தார்.. மனோஜ்ஜூம் இளையராஜாவை "ராஜா அப்பா" என்றுதான் கூப்பிடுவார்.

கலை என்ற புள்ளி

எனவே, நண்பர்களின் பிள்ளைகள் தன்னுடைய பிள்ளைகள் போலவே இவர்கள் இருவரும் கருதினார்கள்.. நண்பரின் அம்மா, தங்களின் அம்மா போலவே பாவித்தனர்.. சாதி மதம் தாண்டி, "கலை" இவர்களை ஒன்றுசேர்த்தது.. எல்லாரும் குடும்பம் போல அன்று முதல் வாழ்ந்து வந்துள்ளனர். இப்போதுள்ள தலைமுறையினர் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

காசு, பணம் நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.. ஜெயிக்காதவர்களை பார்த்து, உனக்கு பிழைக்க தெரியவில்லை என்கிறார்கள். அவர்களை பிழைக்க தெரியல என்று சொல்லலாம், ஆனால், அவர்களுக்கு வாழ தெரியவில்லை என்று சொல்ல முடியாது. நிம்மதியாக வாழ்பவர்கள் அவர்கள்தான்.

ஜிகே வெங்கடேஷ் - புட்டண்ணா

இளையராஜா - பாரதிராஜாவின் நட்பு போன்று நமக்கெல்லாம் அமையுமா தெரியல.. விழும்போது தாங்கி பிடிக்கக்கூடிய ஆறுதல் சொல்லக்கூடிய, தூக்கி நிறுத்தக்கூடிய நட்பு நமக்கு கிடைக்குமா தெரியாது.. இளையராஜாவுக்கு ஜிகே வெங்கடேஷ் குருநாதராக கிடைத்தார்.. அவர் மூலமாக புட்டண்ணாவிடம் உதவியாளராக பாரதிராஜா சேர்ந்தார். இவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கைதூக்கி உதவி செய்து கொண்டார்கள்... இன்று உச்சத்திலும் உள்ளனர். இதையும் இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற எந்த உணர்வுகளுமே இல்லாமல் ஒரு தலைமுறை இன்று உருவாகிக்கிட்டு இருப்பது வருத்தமாக உள்ளது.. நட்பு என்றால் என்னவென்றே தெரிவதில்லை.. சினிமாவுக்குள்ளேயே ஜாதி தலைதூக்கியிருக்கிறது. பாரதிராஜா, இளையராஜா என இவர்கள் யாருமே சாதி பார்க்கவில்லை.. இவர்களை சேர்த்தது கலை மட்டுமே அதுதான் வெற்றி பெற தூண்டியது.

விரசமின்றி, ஆபாசமின்றி

இன்னும் சொல்லப்போனால், வேதம் புதிது, அலைகள் ஓய்வதில்லை என்று சாதி மதத்துக்கு எதிராக புரட்சிகளை செய்தவர் பாரதிராஜா. ஒரு இயக்குனராகவும் இல்லாமல், சமூக அக்கறை உள்ளவர்.. விரசமின்றி, ஆபாசமின்றி, மனித உணர்வுகள் நிறைந்த படங்களை கொண்டு வந்தவர் பாரதிராஜா.. இதையும் இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று அவரவர் ஜாதிக்காரர்களுக்கு நடிக்க வாய்ப்பு தருவது, அவரவர் ஜாதிக்காரர்களை டெக்னீஷியன்களாக வைத்து கொள்வது என்று இன்று பலரும் சினிமாவில் மாறிவிட்டார்கள்..

நண்பர்கள் என்ற வரிசை

இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் மூவருமே உச்சத்தை தொட்டவர்கள், மூவருமே படைப்பாளிகள்.. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, அந்த நட்புதான் இன்று ஓங்கி நிற்கிறது.. அதுதான் நிரந்தரமாகவும் அவர்களிடம் தங்கி இருக்கிறது. இளையராஜா, பாரதிராஜா, கங்கை அமரன் என எல்லாருமே இன்று நண்பர்கள் என்ற வரிசையில்தான் நிற்கிறார்கள்.. இதையும் இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+