மனோஜ் இறப்புக்கு யுவன் வரல, காரணம்? வைரமுத்து தினமும் வந்து ஆறுதல் சொல்றாரு! பாரதிராஜாவின் தம்பி
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருடைய இறப்புக்கு கூட சினிமா பிரபலங்கள் பலர் வரவில்லை. அதிலும் மனோஜின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா கூட வரவில்லை
என்று பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் பேசி இருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவில் இருந்து வைரமுத்து தான் தினமும் வந்து பாரதிராஜாவை பார்த்து ஆறுதல் சொல்லிட்டு போறாரு என கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்களை கதாநாயகர்களாக்கிய பெருமை பாரதிராஜாவையே சாரும். கிராமபுறத்தில் இருக்கும் இளைஞர்களும் நடிகர்களாக ஆக முடியும் என்ற நம்பிக்கையை விதித்தவர் இவர்தான். மதுரையில் சாமி கும்பிட போயிருந்த நேரத்தில் அங்கு வளையல் விற்று கொண்டிருந்த பாண்டியனை கதாநாயகனாக மாற்றி இருந்தார். அதுபோல கிரிக்கெட் விளையாடி கொண்டு வந்த கார்த்திகை தன்னுடைய திரைப்படத்தின் கதாநாயகனாக மாற்றி இருந்தார்.

தாஜ்மஹால் நாயகன்
இப்படி பல நடிகர்கள் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பிரபலத்தை கொடுத்தது பாரதிராஜா தான். பாரதிராஜா திரைப்படத்தில் நடித்து பெயர் வாங்கி விட்டார் அதற்குப் பிறகு சினிமாவில் அவர்களுக்கு தனி அடையாளம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜாவிற்கு சினிமாவில் அவர் ஆசைப்பட்ட இடம் கிடைக்கவில்லை என்று பல பேட்டிகளில் அவர் பேசி இருந்தார். மனோஜ் பாரதிராஜாவுக்கு சிறு வயதிலிருந்து இயக்குனராக வேண்டும் என்ற கனவுதான் இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசைக்காக தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனார்.
மனோஜ் நடித்த ஹிட் படங்கள்
அந்த நேரத்தில் அவரைக் குறித்து அதிகமான விமர்சனங்களும் இருந்தது. ஆனாலும் அவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்போ வரைக்கும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் அந்த படம் இடம் பிடித்திருக்கிறது. அதில் உள்ள பாடல்கள் பெயர் வாங்கியது. அதிலும் ஒரு பாடலை மனோஜ் பாடியிருந்தார். அதுபோல அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மனோஜ் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு எதிர்பார்த்து அளவிற்கு வெற்றிக் கொடுக்கவில்லை. ஆனாலும் வருசமெல்லாம் வசந்தம், சமுத்திரம் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்திருந்தது.
வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
எப்படியாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த மனோஜ் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்திருந்தார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருடைய மரண செய்தி கேட்டதும் திரைத்துறையினர் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்தனர். ஆனால் அவரோடும் பாரதிராஜாவுடனும் நெருங்கி பழகிய சிலர் மனோஜ் இறப்பு செய்திக்கு கூட வருத்தம் தெரிவித்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போடவில்லை.
நேரில் வராத பிரபலங்கள்
அதுபோல நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அதிலும் நடிகர் அஜித், சிம்பு, ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் கூட போஸ்ட்கூட போடவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இளையராஜாவின் மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவும் மனோஜின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்று பாரதிராஜாவின் தம்பி ஆன ஜெயராஜ் பேசியிருக்கிறார்.

வைரமுத்து செய்த செயல்
அதில் அவர் பேசுகையில், மனோஜின் இறுதி சடங்கில் பல நடிகர்கள் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை அதிலும் அவரோடு நெருங்கி பழகியவர்கள் கூட வரவில்லை. அது எங்களுக்கே வியப்பாக தான் இருந்தது. ஆனாலும் அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிலும் யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா போன்றவர்கள் கூட அன்னைக்கு வீட்டுக்கு வரல. ஒருவேளை அவர்கள் இளையராஜா உடன் டெல்லிக்கு போய் இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் வேலை இருந்ததா என்று தெரியவில்லை. அதுபோல வைரமுத்து தான் தினமும் வந்து கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிட்டு போயிட்டு இருக்காரு என ஜெயராஜ் பேசி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications