மனசெல்லாம் மனோஜ்.. கட்டுக் கட்டாக பணத்தை மகனிடம் திணித்து பூரித்த பாரதிராஜா! ஆழ்மனசில் ஒரு கடைசி ஆசை
சென்னை: மகன் மனோஜ் இறந்ததுமே நெஞ்சடைத்துபோய் விட்டார் பாரதிராஜா.. அந்த இழப்பிலிருந்து அந்த குடும்பமே மீளவில்லை. பாரதிராஜாவால் மீண்டு வர முடியவில்லை.. 46 வயதில் மனோஜ் இறந்ததை பாரதிராஜாவால் மட்டுமல்ல, அவரது மனைவி நந்தனா, பிள்ளைகளால்கூட அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியொன்றில் வேதனை தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, மனோஜ் இறப்பதற்கு முன்பேயே பாரதிராஜாவுக்கு வயது மூப்பு காரணமாக சின்ன சின்ன உடல்நல பாதிப்புகள் இருந்தன..

நீலாங்கரை வீடு
நுரையீரல் தொற்று, சிறுநீரகத்தில் தொற்று போன்ற பிரச்சனைகள் இருந்து, சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார்.. இதற்கு பிறகு நீலாங்கரை வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். அப்போது அப்பாவை மனோஜ் உடனிருந்து கவனித்து கொண்டார்.. என்றாலும் தந்தை-மகனுக்கு இடையே சின்ன சின்ன மனக்கசப்புகள் வந்துள்ளன.
ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளது.. பாரதிராஜா ஒரு வீட்டிலும், மனோஜ் தனியாக சேத்துபட்டில் ஒரு அப்பார்ட்மென்ட்டிலும் தனித்தனியாக தங்கி வந்துள்ளனர்.
உடைந்த பாரதிராஜா
இதற்கு பிறகு மனோஜூக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தநிலையில், திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.. இதுதான் பாரதிராஜாவுக்கு பெரும் பாதிப்பை தந்துவிட்டது.. பேரதிர்ச்சியை தந்துவிட்டது.. பார்ப்பதற்குதான் கரடுமுரடாக தெரிவார்.. ஆனால், மனசு மிகவும் மென்மையானது.. மகன் மனோஜ், மகள் ஜனனி மீது அளவுக்கதிகமான பிரியத்தை வைத்திருந்தார்.
அதிலும் மகன் பிறந்தபோது, சினிமாவில் வளர்ச்சியை பாரதிராஜா கண்டிருக்கிறார்.. அந்த நேரத்தில் பாரதிராஜாவுக்கு பெரிய தொகை சம்பளம் பெற்றபோது, அதை குழந்தையான மனோஜின் கையில் தந்து அழகு பார்த்தாராம் பாரதிராஜா.. இவ்வளவு பணழும், பேரும், புகழும் உன்னால்தான் வந்தது என்று பூரித்து சொன்னாராம். இப்படி ரசித்து ரசித்து பிள்ளையை வளர்த்தார். பிறகு மகன், மகள் பெயரில் பல படங்களை தயாரித்து வந்தார்..
46 வயதில் மனோஜ்
மனோஜ்ஜை உதவி இயக்குனராக தன்னுடனேயே வைத்து கொண்டார்.. பிறகு தாஜ்மகால் படத்தில் அறிமுகப்படுத்தினாலும், பெரிய அளவுக்கு ஹீரோவாக மகனை கொண்டுவர முடியவில்லை., மனோஜ் ஆசைப்பட்டபடி டைரக்டராகவும் உயர முடியவில்லை..
மனோஜ் இறந்ததுமே நெஞ்சடைத்துபோய் விட்டார்.. அதிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை.. 46 வயதில் மனோஜ் இறந்ததை பாரதிராஜாவால் மட்டுமல்ல, அவரது மனைவி நந்தனா, பிள்ளைகளால்கூட அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை..
பாரதிராஜாவின் ஒரே மகள் ஜனனி, மலேசியாவில் கணவன், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.. பாரதிராஜா மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டதால், அப்பாவை அழைத்து சென்று தன்னுடனேயே மலேசியாவுக்கு அழைத்து சென்று சிறிது காலம் தங்க வைத்திருக்கிறார்.. அப்போதுகூட அந்த அறையில் மனோஜ் போட்டோவை வைத்து கொண்டு, எந்நேரமும் அதை பார்த்து கலங்கியபடியே இருந்துள்ளார் பாரதிராஜா.
ஆழ்மனசு கடைசி ஆசை
இப்போது பாரதிராஜாவுக்கு நினைவு தப்பிவிட்டதாக அவரது தம்பி ஜெயராஜ் சொல்லியிருந்தார்.. யாராவது அவரிடம் சென்றால்கூட, அவரை உடனே நினைவுக்கு கொண்டு வர முடியவில்லையாம்.. ஆழ்ந்த துக்கம், தொண்டையை அடைத்து, என்ன செய்வதென்றே தெரியாத நிலைமை அது. அவரது வயதும் ஒரு காரணமாகும்..
இன்னொரு படத்தை எப்படியாவது இயக்கி விட வேண்டும் என்பது பாரதிராஜாவின் ஆழ்மனசில் ஆசையாக உள்ளதாக ஜெயராஜ் கூறியிருந்தார்.. அப்படியொரு சூழ்நிலை பாரதிராஜாவுக்கு அமைந்து, படமும் டைரக்ட் செய்து, எப்படியாவது மனவேதனையிலிருந்து அவர் மீண்டு வந்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications