மனோஜ் இறப்புக்கு இரங்கல் கூட தெரிவிக்காத பிரபலங்கள்.. அட இந்த நடிகருமா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: தமிழ் சினிமா உலகில் பெரும் புரட்சி செய்த பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவருடைய மரணம் தமிழ் திரை உலகிலும் ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் ஒரு சில நடிகர்கள் இந்த வருத்தமான நிகழ்வுக்கு கூட இரங்கல் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில கூட வருத்தம் தெரிவிக்காது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி இருக்கிறது.
இப்போதைய காலகட்டத்தில் சில இயக்குனர்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களையே தங்களுடைய திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு கிராமபுறத்தில் இருக்கும் சாதாரண மக்களையும் கூட புது முக நடிகர்களாக அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் தான் பாரதிராஜா.

சாதனை செய்த பாரதிராஜா
மதுரைக்கு சாமி கும்பிட போயிருந்த நேரத்தில் அங்கு வளையல் கடை நடத்திக் கொண்டிருந்த பாண்டியனை பார்த்ததும் அவரை கதாநாயகனாக மாற்றி இருந்தார். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத பலருக்கும் சினிமாவில் பெரிய வாழ்க்கையை கொடுத்த பாரதிராஜாவின் மகன் எவ்வளவோ திறமைகள் இருந்தாலும் அவரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. இதுவே அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
துளைத்த கேள்விகள்
"அப்பாவை போல நீங்கள் ஜெயிக்கவில்லையே ஏன்" என்ற கேள்வி அவர் திரும்பும் பக்கமெல்லாம் அவரை நோக்கி துளைத்தெடுக்க அதனாலயே எட்டு வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கி கிடந்தார். ஆரம்பத்திலிருந்து இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மனோஜ் தன்னுடைய அப்பாவின் ஆசைக்காக நடிகராக சினிமாவில் அறிமுகமானார்.
மனோஜின் திடீர் இறப்பு
நடிக்க தொடங்கிய பிறகு ஒரு சில திரைப்படங்கள் வெற்றி கொடுத்திருந்தாலும் ஆனால் பெரிய அளவில் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது அவருக்கே புரியாத புதிராகத்தான் இருந்தது. எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும், படத்தை இயக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மனோஜின் உயிர் 48 வயதிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டது.
வருத்தமான செய்தி
மனோஜ் இறந்துவிட்ட செய்தி கேள்விப்பட்டதும் நடிகர் சூர்யா, கார்த்தி, விஜய், எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர். அதுபோல இயக்குனர்களில் பாக்கியராஜ், பாண்டியராஜ், கே ஆர் கே செல்வமணி, பி வாசு, மணிரத்தினம், சுந்தர்ராஜன் உட்பட பல பிரபலங்களும் சென்று இருந்தார்கள்.
மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத நடிகர்கள்
அதுபோல சில நடிகர்கள் இயக்குனர்களால் நேரில் வர முடியவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தனர். ஆனால் நடிகர் சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜெயம் மோகன் (ஜெயம் ரவி), ரஜினிகாந்த் உட்பட ஒரு சிலர் நேரில் வந்து இரங்கல் தெரிவிக்கவில்லை சோசியல் மீடியாவிலும் போஸ்ட் போடவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அவ்வளவு பிஸியா
நடிகர் தனுஷுடன் பாரதிராஜா திருசிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்திருந்தார். பாரதிராஜா மீது அன்பும் மரியாதையும் கொண்டவர் நேரில் வர முடியவில்லை என்றாலும் ட்விட்டரில் இரங்கல் பதிவு போட்டு இருக்கலாம் ஆனால் அவர் இதை செய்யவில்லையே என்று சிலர் வருத்தத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள். அதுபோல விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருக்கிறார் பாரதிராஜா உடன் படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்காகவாவது நேரில் சென்று இருக்கலாம் அல்லது ட்விட்டரில் போஸ்ட் போட்டிருக்கலாம் அவரும் இதுபோன்று செய்யவில்லையே ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரஜினி பற்றி ரசிகர்கள் வருத்தம்
அதுபோல ரஜினிகாந்த்க்கு பாரதிராஜாவின் படங்கள் பெரிய பிரபலத்தை கொடுத்தது. ஆனால் அவருக்கும் பாரதிராஜாவுக்கும் சில வருடங்களுக்கும் முன்பு கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அதனால் எந்த சமயத்தில் கூட ரஜினி நேரில் வந்து பார்க்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் அவர் சூட்டிங்கில் பிஸியாக இருந்தால் ட்விட்டர் பக்கத்திலாவது போஸ்ட் போட்டு இருக்கலாம் என்பது பலருடைய ஆதங்கமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications