மனோஜ்ஜின் சவப்பெட்டியை சுற்றி வந்த மகள்கள்.. இதுவும் வீடியோவா? லேட்டா விழுந்த அறிக்கை: பிரபலம் நறுக்
சென்னை: மனோஜ் பாரதிராஜா இறுதிச்சடங்கு மட்டுமல்ல, கல்யாணத்துக்கு ஃபிளைட் டிக்கெட் எடுத்து தந்து, பிரபலங்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று, அதையும் வீடியோ வெளியிட்டு காசாக்குவதையும் நிறுத்தணும்.. உங்க வீட்டு சுபநிகழ்ச்சிகளை ஏன் காட்சிப்படுத்துறீங்க? எனவே, துக்க நிகழ்வு, சுபநிகழ்வு இரண்டுக்குமே மீடியாக்களுக்கு தடை செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
"யாரோ இறந்துபோனார், எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?!

நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமே ஊடகங்கள் கார்களின் உள்ளேயும், நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது, என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
யூடியூப் சேனல்கள் அட்டகாசம்
இதுகுறித்து Fine Film Cine யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, இதற்கு முன்பு எத்தனையோ பிரபலங்கள் வீட்டில், துக்க நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அங்கெல்லாம் கேமராக்களை கொண்டு போய் மீடியாக்கள் கவர் செய்துள்ளன..
அப்போதெல்லாம் விடாத அறிக்கையை, இப்போது பாரதிராஜா வீட்டில் துக்கம் என்றதும், வெளியிடுகிறார்கள்.. தங்களுக்கு வலிக்கும்போது மட்டும் அறிக்கை வெளியாகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக உள்ளதால்தான், இப்படியான அறிக்கை வந்ததாகவே அது பார்க்கப்படுகிறது.
லேட்டா வந்த தயாரிப்பாளர் சங்கம்
அஜித் வீட்டிலும் இப்படியான துக்க நிகழ்வு நடந்தது.. எங்கள் வீட்டு நிகழ்வை அமைதியாக என்னை செய்ய விடுங்கள் என்று அஜித் கைகூப்பி கேட்டு கொண்டதுமே, அனைத்து மீடியாவும் அதற்கு ஒத்துழைப்பு தந்து, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டன. விஜய் ஆண்டனியும் இப்படிதான் மீடியாக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.அப்போதெல்லாம் பேசாத தயாரிப்பாளர் சங்கம் இப்போது மட்டும் பேசுகிறது. எனினும், தயாரிப்பாளர் தரப்பில் வெளியாகியிருந்த அந்த அறிக்கை மிகவும் நியாயமானதே.
எப்போதுமே ஒரு துக்க வீட்டிற்குள் கேமராவை கொண்டு அதை படம்பிடிப்பது, அங்கிருப்பவர்களை பேட்டி எடுப்பது அதெல்லாம் செய்யவே கூடாது.. எந்த துக்க வீடாக இருந்தாலும் அதை செய்யக்கூடாது. மீடியாக்கள் நாகரீகமாக நடநது கொள்ள வேண்டும்.. யூடியூப்களிலும் மிகைப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டுவிட்டார்கள்..
பெண் பிள்ளைகள் செய்த சடங்கு
ஒரு செய்தியை தகவலாக தெரிவிக்க வேண்டுமே தவிர, அதை மிகைப்படுத்தி, திரித்து, வெளியிடக்கூடாது. எல்லா நிகழ்வுகளையுமே மீடியாக்கள் படம் பிடிக்கணுமா? முதலமைச்சர் மரியாதை செலுத்த வருகிறார்கள் என்றால் அதை படம் பிடிக்கலாம்.. பிரபலங்கள் அஞ்சலி செலுத்துதை படம் பிடிக்கலாம்..
ஆனால், தாய், தகப்பன் கதறுவது, மனைவி கண்ணீர் வடிப்பது, பிள்ளைகள் இறுதிச்சடங்கு செய்வது, இதையெல்லாமா காட்சிப்படுத்துவது? அதுவும் சவப்பெட்டியை மனோஜ்ஜின் பிள்ளைகள் சுற்றிவந்து சடங்கு செய்வதை கேமராவில் எடுத்ததெல்லாம் மிகவும் தவறு. இதை நிச்சயம் கேமராவால் எடுத்திருக்க முடியாது. செல்போனில்தான் எடுத்திருக்க முடியும். அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டதா யூடியூப் சேனல்கள்? யூடியூப் மட்டுமல்ல, மெயின் டிவி ஒன்றும் இதனை செய்திருந்தது.
சுப நிகழ்ச்சிகள் - வியாபாரம்
நான் மீடியாக்காரனாக இருந்தாலும் சொல்கிறேன், மீடியாக்கள் ரொம்ப மோசமாக நடந்து கொள்கின்றன.. சுபநிகழ்ச்சியை கூட யாரும் அனுமதிக்க வேண்டாம்.. அந்த சுபநிகழ்ச்சியை படமாக்கி, அதை டிவியில் விற்று, வியாபாரமாக்குவதை நிறுத்தணும்..
அதேபோல, கல்யாணத்துக்கு ஃபிளைட் டிக்கெட் எடுத்து தந்து, பிரபலங்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று, அதையும் வீடியோ வெளியிட்டு காசாக்குவதையும் நிறுத்தணும்.. உங்க வீட்டு சுபநிகழ்ச்சிகளை ஏன் காட்சிப்படுத்தறீங்க? எனவே, துக்க நிகழ்வு, சுபநிகழ்வு இரண்டுக்குமே மீடியாக்களுக்கு தடை செய்யலாம்..
அஜித், விஜய் ஆண்டனி
அஜித், விஜய் ஆண்டனி இருவருமே மீடியாக்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததுபோல, பாரதிராஜா தரப்பில் ஏன் மீடியாக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படவில்லை. முன்னுதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், ஆரம்பத்திலேயே மீடியாக்களை தடுக்காமல், பிறகு வந்து அறிக்கை வெளியிடுவதில் பலனில்லை.. தயாரிப்பாளர் சங்க தரப்பில் வெளியான அறிக்கையில் உள்ள விஷயம் அத்தனையும் நியாயமானதே.. சரியானதே.. ஆனால், அது வெளியிட்ட நேரம்தான் தவறு..!!" என்கிறார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications