பெண் நிருபர் கேட்ட அந்த கேள்வி.. பாத்ரூமை திறந்து காட்டிய மன்சூர் அலிகான்.. கூடவே அந்த பஞ்ச் டயலாக்
சென்னை: பிரபல நடிகர் மன்சூர் அலிகான் திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய மனதில் பட்டதை டக்கென்று பேசிவிடும் நபராக தான் இருக்கிறார்.
அதனாலயே பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.

ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மன்சூர் அலிகான் தற்போது அவரிடம் பேட்டி எடுத்த நிருபரிடம் நடந்து கொண்ட விதம் குறித்து தற்போது இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ்கள் பார்த்து மிரண்ட வில்ல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் அதிகமாக சத்யராஜ், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களோடு வில்லனாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பு மற்றும் வில்லத்தனமான டயலாக் பார்த்து மிரண்டு போனவர்கள் ஏராளமானோர்.
அதிலும் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆக வெற்றி பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் இருக்கும். தத்ரூபமாக அப்படியே ஒரு மோசமான வில்லனை பார்த்த காட்சிகளை அனைவரின் முன்பு கொண்டு வந்து மிரட்டி இருப்பார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரமாகவும் நடித்துக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. ஆனாலும் சமூக நலனில் அக்கறை கொண்டு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அதிகமாக மரம் வளர்ப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதுபோல தேர்தல்களில் சுயேசையாக போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
தொடர்ச்சியாக சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிருபர் ஒருவர் அவருடைய வீட்டிற்கு பேட்டி எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை பார்த்த மன்சூர் அலிகான் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போன்று முகத்தை திருப்பி கொள்கிறார்.

மன்சூர் அலிகானிடம் நீங்க நல்லா இருக்கீங்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இது நாட்டுக்கு ரொம்ப தேவையா? அவனவன் வீடு இல்லாமல் அலைஞ்சுகிட்டு இருக்கான் என்று பேசுகிறார். அது தொடர்ந்து வீட்டில் இருக்கும் மரங்களை வெட்டாமல் அதன் பக்கத்திலேயே சுவர் வளர்த்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு நான் வீட்டுக்குள்ளே ஆறு மரங்களை வைத்திருக்கிறேன் என்று சொல்லி பாத்ரூம் அறையை திறந்து காண்பிக்க, அங்கே ஒரு பெரிய பனை மரத்தை காட்டுகிறார். அதை பார்த்தது நிருபர் அசந்து போய்விட, சமையலறையிலும் இரண்டு மரங்கள் இருக்கிறது. மரங்களை வெட்டுவது எனக்கு பிடிக்காது. அதனாலேயே வீட்டில் ஆறு மரங்களை வளர்த்து அதனோடு வீடு கட்டி வைத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படியாக இவர் பேசிய இந்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications