இளையராஜா முன்னிலையில் தொடங்கிய மஞ்சனத்தி.. மாரி செல்வராஜின் அந்த ஒரு வரியில் இருக்கும் கதை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில படங்களுக்கு பூஜை புதிய பயணம் தொடங்கும். ஆனால் மஞ்சணத்தியில் இன்று நடந்தது கொஞ்சம் ஸ்பெஷல். காரணம் படத்தின் முதல் கிளாப்பை அடித்து கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தது வேறு யாரும் இல்லை இசைஞானி இளையராஜா தான்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதை எடுத்து நடந்த பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்களை மாரி செல்வராஜ் வெளியிட்டு, "இன்று முதல் மஞ்சணத்தி.. தொடங்கி வைத்த எங்கள் இசைஞானியின் என்றைக்குமான எங்கள் நன்றியும், அன்பும்.." என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

Mari Selvaraj

மஞ்சணத்தி பட பூஜை

இந்த புகைப்படங்களை பார்த்தாலே ஒரு விஷயம் புரிகிறது. இது வழக்கமான சினிமா பூஜை போல இல்லாமல் முழுக்க ஒரு அமைதியான எளிமையான தொடக்கமாக இருக்கிறது. வெள்ளை உடையில் இளையராஜா, அவருடன் மாரி செல்வராஜ் படம் குழுவினர் என அந்த நிகழ்வு தனிக்கவனத்தை பிரித்திருக்கிறது. ஆனால் இந்த பூஜையில் இருக்கும் மிகப்பெரிய விஷயம் சாமி கும்பிட்டது மட்டுமல்ல மாரி செல்வராஜுக்கு இளையராஜா எவ்வளவு பெரிய கனவு என்பது தான்.

இளையராஜா மீது அன்பு

மஞ்சணத்தி அறிவிப்பு வெளியான போது மாரி செல்வராஜ் இளையராஜாவைப் பற்றி பேசிய விதம் கவனத்தை ஈர்த்தது. சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் இசை தனக்குள் கலந்து விட்டதாகவும் அவரிடம் பணியாற்ற வேண்டும், என்று ஆசை இருந்ததாகவும், அதற்காக பக்குவமான இடத்திற்கு தான் முதலில் வரவேண்டும் என்று நினைத்ததாகவும் சொல்லியிருந்தார். ஒருநாள் அவரிடம் போய் ஒரு நல்ல கதையை சொல்லிவிட்டால் போதும் அதற்கு பிறகு இளையராஜா என்ன இசையை உருவாக்குகிறார் என்பதை நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் கனவு என்று பேசி இருந்தார்.

இப்போது அந்த கனவு நிஜமாகி அந்த கூட்டணியில் படப்பிடிப்பையும் இளையராஜாவே தொடங்கி வைத்திருக்கிறார். அதனால் தான் மாரி இவ்வளவு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். மஞ்சனத்தி மாரி செல்வராஜின் 6வது இயக்கம். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் காலமாடன் என ஒவ்வொரு படத்தில் தனக்கான ஒரு உலகத்தை உருவாக்கிய மாதிரி இப்போது மஞ்சணத்தி மூலம் இன்னொரு கதைக்குள் அழைத்து செல்ல போகிறார்.

மஞ்சணத்தி படத்தின் நடிகர்கள்

இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோருடன் பூர்ணிமா ரவி, விது, காக்கா முட்டை புகழ் ஜி விக்னேஷ் ஆகியோரும் இணைந்து இருக்கிறார்கள். கதிர் ஏற்கனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்திருந்தார். இப்போது 2 வது முறையாக சேர்ந்து நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு எழில் அரசு, எடிட்டிங் செல்வா ஆர்கே, கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

மஞ்சணத்தி படத்தின் கதை

மாரி செல்வராஜ் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் ஸ்டுடியோஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். இன்னொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது இது வாழை படத்தின் தொடர்புடைய கதையா? மஞ்சணத்தி என்பது வாழை படத்தில் வந்த சிவனைந்தன் கதாபாத்திரத்தின் இளம் வயது கதை தானா? என்று பல்வேறு கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் படத்தில் என்ன கதை சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+