விஜய் அண்ணா, உங்களை பத்தி பெருமையா பேசினா இப்படியா பண்ணுவீங்க? ஜனநாயகனை இழுத்து அட்டாக் செய்த ஜூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக நடிகர் Vijay கூறிய "ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரி" மற்றும் அதற்கு எதிராக ஜுலி (Maria Juliana) வெளியிட்ட கருத்து குறித்து பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது.

Vijay Maria Juliana vijay tv

விஜய் குட்டி ஸ்டோரி

கரூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விஜய் பேசும்போது, ஜல்லிக்கட்டு காளையை மையமாகக் கொண்டு ஒரு "குட்டி ஸ்டோரி" கூறியிருந்தார். அந்த கதையில், ஜல்லிக்கட்டு காளை முன் புல்லுக்கட்டு தூக்கி நின்ற சிறுவன் பற்றிய ஒரு உதாரணத்தை வைத்து தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறித்து விளக்க முயன்றார்.

ஜூலியின் வீடியோ

ஆனால் அந்தக் கதையை கேட்டு கடுப்படைந்த ஜூலி, அதனை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், "நீங்கள் ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுக்கட்டு தூக்கிட்டு போன ஒரு சிறுவன் பற்றி கதையை சொல்லிட்டு போயிட்டீங்கன்னா, உங்க கட்சியில் இருக்கும் மைனர் பசங்க அதை நம்பி உண்மையிலேயே ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுக்கட்டுடன் போய் நின்னா நடக்கும் விபரீதத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்கப் போறீங்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ இணையத்தில் விரைவாக பரவி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டனர். சிலர் கடுமையாகவும் சிலர் நக்கலாகவும் பதிலளித்தனர்.

இதற்கு பதிலாக ஜூலி தொடர்ந்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோக்களில், தன்னை திட்டியவர்களின் வீடியோக்களை ரெஃபரன்ஸ் ஆக காட்டி தனது கருத்தை விளக்கினார். அதில் அவர் கூறியதாவது: "நான் கூட விஜய் அண்ணா சொன்ன குட்டி ஸ்டோரியை எடுத்துட்டு போய் நீங்க பாட்டுக்கு ஏதோ பண்ணிருவிங்கனு என்று நினைத்தேன். ஆனால் அதில் இருக்கும் கருத்து உங்களிலே ஒரு சிலருக்கு கூட புரியந்திருக்கு. அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்," என்று அவர் நக்கலாக பேசினார்.

மேலும், சில சிறுவர்களும் தன்னை திட்டி வீடியோ வெளியிட்டதையும் தனது வீடியோவில் அவர் காட்டினார். அதனைத் தொடர்ந்து, விஜய் ஒரு கூட்டத்தில் பேசிய மற்றொரு சம்பவத்தையும் ஜூலி குறிப்பிட்டார். அந்த கூட்டத்தில் ஒரு அரசியல் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டபோது, "நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?" என்று ஒரு குடும்பத் தலைவியிடம் கேட்கப்பட்டது.

அப்போது பின்னால் இருந்த இரண்டு சிறுவர்கள் "அம்மா விஜய்க்கு சொல்லும்மா" என்று கூறியதாக விஜய் கூறி, இதை எடுத்துக்காட்டாகக் கொண்டு "இப்படி ஒவ்வொரு வீட்டிலும் எங்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது; குழந்தைகளே எங்களுக்காக வாக்கு கேட்கிறார்கள்" என்று பெருமையாக பேசினார்.

இந்த நிகழ்வை குறிப்பிட்ட ஜூலி, தனது வீடியோவில்: "இப்பதான் உங்களைப் பற்றி பெருமையாக பேசினேன் விஜய் அண்ணா. What is this Vijay Anna? இது very wrong விஜய் அண்ணா. இதைத்தான் நான் சொல்றேன். உங்க கட்சியில் இருக்க முக்கால்வாசி பேர் உண்மையிலேயே மைனர் பசங்களா இருக்காங்க, இல்லன்னா மண்டையில் மைனரா இருக்காங்க," என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: "பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு. ஒரு கருத்துக்கு எதிராக கருத்து வையுங்கள். அதுதான் ஜனநாயகம். நான் ஒரு கருத்து சொன்னால், அதற்கு பதிலாக உங்கள் கருத்தை வையுங்கள். உங்கள் 'வெர்ச்சுவல் வாரியர்ஸ்'.. இல்ல 'வல்கர் வாரியர்ஸ்' வைத்து திட்டுவது சரியான அரசியல் கலாச்சாரம் அல்ல," என்று நக்கலாகவும் விமர்சனமாகவும் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+