நீலம் படையோடு வெளுத்து வாங்கிய இசைவாணி... மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: மார்கழி மக்கள் இசையில் நான்காவது நாளில் பாட்டுப் பாடி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் இசைவாணி.
Recommended Video
ஜெய் பீம் நிகழ்ச்சியில் நீளம் படையினரின் அசத்தலை பார்த்து ரசிகர்கள் அரண்டு போயிருக்கிறார்கள்.

மீண்டும் சென்னையில் முதல் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் முறையாக இசைவாணி கலந்து கொண்டதால் அவருடைய ரசிகர்களுக்கு எனர்ஜி கிடைத்துள்ளதாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய கானா பாடல்களை உலக அளவில் எடுத்துச் செல்வார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அங்கே ரசிகர்களின் ஆசை நிறைவேறவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் களத்தில் இறங்கி இருக்கும் இசை வாணிக்கு அவருடைய ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இசை வாணியின் அன்பு வேண்டுகோள்
தற்போது மார்கழி மாதத்தில் நடக்கும் மக்கள் இசை நிகழ்ச்சியில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காண பாடகர்களும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார்கள். நேற்றைய நான்காம் நாள் திருவிழாவில் ஜெய்பீம் நிகழ்ச்சியில் அம்பேத்கர் பாடல்கள் முழுவதும் நடைபெற்றது. இதில் இசைவாணி பாடிய பாடல்கள் தற்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் தன்னுடைய ரசிகர்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று லைவ் வந்து இசைவாணி ரசிகர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மார்கழி மக்கள் இசை
மார்கழி மாதத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்தாலும் தற்போது மார்கழியில் மக்கள் இசை கலை நிகழ்ச்சிகள் பா ரஞ்சித்,இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலையை ஜனநாயக படுத்தும் மார்கழியில் மக்கள் இசை கலைநிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

அம்பேத்கரின் பாடல்கள்
சமகால அரசியலை மிகவும் பொறுப்போடு தங்களுடைய பாடல்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் Castles collective குழுவினர் பங்கு பெற்ற மார்கழியில் மக்கள் இசை கலைத் திருவிழாவில் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக இசைவாணி ரசிகர்களிடம் நன்றி தெரிவித்திருக்கிறார்.அம்பேத்கரின் புகழை இவர் பாடியதால் பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தங்களுடைய பாடல்களில் கருத்தாக வெளியிட்டமைக்கு பலர் நன்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் பலர் வழக்கம்போல ட்ரோல் செய்து இசை வாணியை கலாய்த்து வருகிறார்கள். தனக்கு வரும் ஒருசில நெகட்டிவ் கமெண்டுகளை பற்றி கவலைப்படாமல், பாசிட்டிவ் கமெண்ட்களுக்கு மட்டுமே இசை வாணியும் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications