மனோஜின் கால் வெளுத்து போய் இருந்தது.. அப்பவே அப்படி சொன்னாரு! மார்கழி திங்கள் பட நடிகர் உருக்கம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று முன்தினம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார். இதுகுறித்து அவர் இயக்கிய மார்கழி திங்கள் பட நடிகர் உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு மனோஜ் பாரதிராஜா இறப்பு செய்தி வந்தது ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு மனோஜ் பாரதிராஜா பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அவருடைய நினைவுகளை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறு வயது கனவு
அதுபோல மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அவருக்கு கதாநாயகன் ஆவதை விடவும் இயக்குனராக வேண்டும் என்பதுதான் சிறுவயதிலிருந்தே இருந்த பெரிய கனவு என்று அவர் பல பேட்டிகளில் அவரும் சொல்லி கொடுக்கிறார். அவருடைய அப்பா பாரதிராஜாவும் சொல்லியிருக்கிறார்.
பாரதிராஜா வருத்தம்
என்னுடைய மகனுக்குள் இருந்த திறமையை நான்தான் புரிந்து கொள்ளாமல் நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டும் பேசி இருப்பார். அதுபோல நடிகர் கார்த்தி கூட ஒரு பேட்டியில் பேசி இருந்தார் அதில், அவர் பேசும் போது நாங்க சின்ன பையனா இருக்கும்போது எங்க குடும்பம் பாரதிராஜா சார் குடும்பம் எல்லாம் ஒரே தெருவில் தான் குடியிருந்தோம்.

கார்த்தி பேட்டி
எங்கள் தெருவில் இருந்த பலரும் எங்கள் அண்ணன் சூர்யாவின் வயதில் இருப்பார்கள். அல்லது என்னுடைய தங்கையின் வயதில் இருப்பார்கள். நானும் மனோஜ் மட்டும் தான் ஒரே வயது அதனால் எங்கள் இருவரையும் கிரிக்கெட் விளையாடும் போது விளையாட்டுக்கு சேர்க்க மாட்டார்கள். பந்து பொறுக்கி போட தான் கூப்பிடுவார்கள் அதனால் நானும் மனோஜும் ஓரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்.

படத்திற்காக உழைப்பு
அப்போது இருந்தே மனோஜ்க்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவு. அதைப் பற்றிதான் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பான் என்று சொல்லியிருந்தார். அதுபோல பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு கடந்த வருடத்தில் தான் மனோஜ் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் தன்னுடைய அப்பாவையும் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் வைத்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
உடல் நிலையில் மோசம்
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த நடிகர் மனோஜ் குறித்து சமீபத்தில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது அந்த திரைப்படத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் மனோஜ் தான் என்னுடைய காலை பார் எவ்வளவு வெளுத்து போய் இருக்கிறது என்று தெரியும் என்று சொன்னார். நானும் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டேன் என்ன இப்படி எடுக்கிறது என்று கேட்டேன் அதற்கு அவர் எனக்கு கிட்னி பிரச்சனை இருக்கிறது அதனால் தான் இப்படி இருக்கிறது என்று சொன்னார்.
கடினமான உழைப்பு
நான் அப்போ ஹாஸ்பிடலில் போய் பார்த்து இருக்கலாமே என்று கேட்டேன். அதற்கு அவர் நான் இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு இப்போதான் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் இந்த நேரத்தில் ஹாஸ்பிடல் அட்மிஷன் என்று ஆகிவிட்டால் படம் நிலைமை என்ன ஆகும் அதனால் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
நல்ல மனிதர்
அப்பவே அதற்கு சரியான ட்ரீட்மென்ட் எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது என்று அந்த நடிகர் கூறி இருந்தார். அதோடு அவர் பேசுகையில் மனோஜ் சாரை பொருத்தவரையில் அவருடைய அப்பா தான் அவருக்கு பெரிய ஹீரோ. அவங்க அப்பா ரொம்பவும் பிடித்த நபர். அதுபோல அவருடைய குழந்தைகளுக்கு மனோஜ் சார் தான் ஹீரோ. ஒரு ஹஸ்பெண்ட் மெட்டீரியல் எப்படி இருக்க வேண்டுமோ அதே போல இவர் இருப்பார். மனைவிக்கு நல்ல கணவராகவும் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருந்தார் என்று அந்த பேட்டியில் அந்த நடிகர் உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications