Thirumanam Serial: காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதே திருமணம் சீரியல் கதை!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதே சீரியல் கதையாக இருக்கிறது.
ஜனனி சந்தோஷ் இருவரும் திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்வார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தால்...
ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்...இல்லை எதாவது பிரச்சனை... என்னதான் செய்வார்கள் தம்பதியர் பாவம்!

ஜனனியை காணோம்
ஜனனி சந்தோஷுக்கு திருமணம் சீரியலில் திருமணமாகி நிஜத்தில் கூட ஒரு வருஷம் ஆகிவிட்டது. அவர்கள் இன்னமும் ஒன்று சேர்ந்த பாடில்லை. சந்தோஷ் சக்தியை காதலித்து, ஜனனியை மணந்ததால் சக்தியை மறக்க முடியவில்லை என்று ஜனனியை டிவோர்ஸ் செய்வதாக பல மாதங்கள் கதை ஓடியது.

ஜனனிதான் இனி
இனி ஜனனிதான் தனக்கு மனைவி என்று சந்தோஷ் ஒரு முடிவுக்கு வருவதற்கு நிஜத்திலும் ஒரு வருஷம் ஆனது.இதற்குள் காணாமல் போன மாயாவின் புருஷன் வந்து சேர்ந்தார். சக்தி காணாமல் போனாள். சந்தோஷ் காணாமல் போனான். அவனைத் தேடி ஜனனி அலைந்தாள்.

நவீன் அனிதா
அனிதா நவீன் காதல் பிரச்சனையானது. இந்த காதல் வேண்டாம் என்று ஜனனி சொல்லியும், அனிதா நவீன் கேட்கலை. ஜனனி வீட்டில் பிரச்சனையானது. இதனால், தங்கை அனிதாவே அக்கா ஜனனி மேல் கோபம் கொண்டாள். இதை சாதகமாக்கிக் கொண்ட மாயா அனிதாவின் மனசை கலைத்தது.

ஜனனியைக் காணோம்
இப்போது ஜனனியைக் காணோம். திருமணம் சீரியலில் திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையிலும் சந்தோஷும் ஜனனியும் சந்தோஷமாக வாழ்வைத் தொடங்கவில்லை. வாழவேண்டிய ஜனனி எங்கு போனாள்? எதற்காக போனாள்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் திருமணம் சீரியல் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications