போட்டியாளர்களை கண்டுகொள்ளாத மாஸ்டர் செஃப் டீம்.. புலம்பும் போட்டியாளர்கள்.. ரசிகர்களின் கருத்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி பற்றி தற்போது சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் பரவிவருகிறது.
மாஸ்டர் செஃப் போட்டியாளர்களுக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி அறிமுகம்
சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப். இது சமையல் போட்டிக்கான நிகழ்ச்சியாக இருந்து வந்தது. அதுபோல இந்த நிகழ்ச்சி ஏற்கனவே 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி பிரிட்டனில் முதல் முறையாக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிட்டானது. அதற்கு பிறகு அதை பார்த்து பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. அதே பாணியில் தான் தற்போது கடந்த ஆண்டு சன் டிவியும் தொடங்கியிருந்தது.

சன் டிவியின் எதிர்பார்ப்பு
விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி ரியாலிட்டி ஷோ தொடங்கி அதில் பெரிய நடிகர்களை தொகுப்பாளராக களம் இறக்கி ரசிகர்களை கவர்வதற்காக முயற்சிகளை செய்து இருந்தது. ஆனால் சன் டிவி எதிர்பார்த்த வகையில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு சென்றிருந்தனர்.

மாஸ்டர் செஃப் குழுவின் வாக்குறுதிகள்
இறுதிப்போட்டியில் வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனல் லிஸ்ட் ஆக சேவ் ஆகியிருந்தனர். இந்த நான்கு பேரில் தேவகி தான் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின் தேவகிக்கு மாஸ்டர் செஃப் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்களுக்கு பிறகு நிகழ்ச்சி குறித்து போட்டியாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் புகார் புலம்பித் தள்ளி வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அவர்களுக்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுகளை திருப்பியளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி தந்து இருந்தார்களாம்.

போட்டியாளர்களின் குற்றசாட்டு
ஆனால் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. போக்குவரத்து பணம் எதையும் யாருக்கும் திருப்பித் தரவில்லையாம் இது தொடர்பாக நேசித்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் போட்டியாளர்கள் பேச முயன்றபோது போட்டியாளர்களுக்கு அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை என்று கருத்து வெளியாகி வருகிறது. அதனால் குறைந்த பட்சம் காசு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் இதனால் இந்த விவகாரத்தை விடக்கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக போட்டியாளர்கள் பேசி வருகிறார்களாம். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ரொம்ப பீல் பண்ணாதீங்க, இதே எல்லா சேனல்களிலும் இதே நிலைமைதான் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வாங்க நாங்க ஆதரவு தருகிறோம் என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications