மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா
சென்னை: மாஸ்டர் மகேந்திரன் இவ்வளவு சின்சியரான, மிகத் தீவிரமான ஒரு மக்கள் பிரச்சனையை அப்படியே லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணுவது போலப் பேசியிருக்கிறார். "இப்ப கரண்ட் இல்லன்னா என்ன? என் வீட்ல வந்து கரண்ட் எடுத்துக்கோங்க, நான் என் வீட்ல சோலார் போட்டு வச்சிருக்கேன், யூபிஎஸ் வச்சிருக்கேன்" என்று மிகவும் தெனாவட்டாகவும் அலட்சியமாகவும் பேசியிருக்கிறார். இது தவறான பேச்சு, இந்த தம்பிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய வீடியோவில் பேசும்போது, "மாஸ்டர் மகேந்திரன் பிரச்சனையைப் பற்றி நாம் கட்டாயமாகப் பேசியே ஆக வேண்டும். அவர் இப்போது படங்களில் நடிப்பதற்கே பெரும்பாடாக இருக்கிறது. சினிமா துறையில் அவருக்குப் படங்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது.

அப்படியே அவர் கஷ்டப்பட்டு நடிக்கும் படங்களும் தியேட்டர்களில் அரை நாளைக்கு மேல் ஓட மாட்டேங்குது. பல ஊர்களில் தியேட்டர்களில் கூட்டம் நிறையாமல், ஆள் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
கரண்ட் பிரச்சனை - இது தேவையா
அவருடைய சினிமா நிலையே இப்படி இருக்கும்போது, அவர் பாட்டுக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் எதற்காக விஜய்க்கு இவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும்?
விஜய்க்கு ஆதரவாக கருத்து சொல்வது மகேந்திரனுடைய தனிப்பட்ட அன்பாகவும், விருப்பமாகவும் இருக்கலாம். விஜய் மீது அவர் பெரிய பாசம் வைத்திருக்கிறார் என்பது எல்லாமே ஓகே தான். ஆனால், கண்டிக்க வேண்டிய விஷயத்தைக் கண்டிக்க வேண்டும் அல்லவா? தேவையில்லாமல் எதையாவது உளறி வைத்து, விஜய்க்கும் ஒரு பக்கம் கெட்ட பெயர், இவருக்கும் ஒரு பக்கம் கெட்ட பெயர். இது ஏன் தேவையில்லாத வேலை?
கரண்ட் பிரச்சனையும், மகேந்திரனின் அலட்சியமும்
இன்றைக்கு மின்வெட்டு என்பது நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது! பல இடங்களில் மக்கள் ராத்திரி தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டு, தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல பேர் இதனால் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். கொசுக்கடி ஒரு பக்கம் மக்களை வதைக்கிறது.
ஒரு வயதான பெண்மணிக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வைத்திருக்கிறார்கள். அந்த வென்டிலேட்டர் இயங்குவதற்குக் கரண்ட் சப்ளை இல்லாமல், மின்சாரம் நின்றதால் அந்த வென்டிலேட்டர் மெஷின் நின்று போய், அந்தம்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.. அது இப்போது ஒரு பெரிய வழக்காக மாறப்போகிறது என்று ஒரு பக்கம் பிரச்சினை தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இவ்வளவு சின்சியரான, மிகத் தீவிரமான ஒரு மக்கள் பிரச்சினையை மாஸ்டர் மகேந்திரன் அப்படியே லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணுவது போலப் பேசியிருக்கிறார். "இப்ப கரண்ட் இல்லன்னா என்ன? என் வீட்ல வந்து கரண்ட் எடுத்துக்கோங்க, நான் என் வீட்ல சோலார் போட்டு வச்சிருக்கேன், யூபிஎஸ் வச்சிருக்கேன்" என்று மிகவும் தெனாவட்டாகவும் அலட்சியமாகவும் பேசியிருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன் - அயோக்கியத்தனம்
இப்படிப் பேசினால் இது விஜயினுடைய பார்வைக்குக் கொண்டு செல்லப்படும், விஜய் நம்மைக் கூப்பிட்டு ரொம்ப அன்பு செலுத்துவார் என்று நினைத்துக் கொண்டு மகேந்திரன் இப்படிப் பேசுகிறார் என்று தோன்றுகிறது.
ஆனால், இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமானது என்பதை முதல்ல அவர் புரிஞ்சுக்கணும். அவர் இன்னமும் மாஸ்டர் மகேந்திரனாகவே இருந்தால் நாம் இந்த கேள்வியைக் கேட்க வேண்டியது இல்லை. ஏென்றால் அவருடைய அறிவும் மாஸ்டர் லெவலில் தான் இருக்கும் என்று விட்டுவிடலாம். ஆனால், அவர் இப்போது மாஸ்டர் என்ற நிலையைக் கடந்து, வயதாகிப் போய்விட்டது. இந்த வயதில் உட்கார்ந்து ஒரு பக்குவமாக யோசிக்க வேண்டிய வயதில், இவ்வளவு தெனாவட்டாகப் பேசுகிறார்.
வீட்டில் சோலார் போட்டுக்கோங்க, யூபிஎஸ் வச்சுக்கோங்க என்று சொல்வதற்கு, இரண்டு வசதிகளையும் செய்து கொள்ளும் அளவுக்கு மகேந்திரனுக்குப் பணம் இருக்கலாம், வசதி இருக்கலாம். ஆனால், அந்த வசதி இல்லாத ஏழை எளிய சாமானிய மக்கள் என்ன பண்ணுவாங்க? அதை அவர் யோசிக்க வேண்டாமா?
மகேந்திரன் என்ன பேசியிருக்கணும்?
அவர் விஜய்க்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்று நினைத்தால், "விஜய் அண்ணா, மக்கள் எல்லாம் மின்வெட்டினால் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் அண்ணா. இந்த விஷயத்தைக் கொஞ்சம் சின்சியராகப் பாருங்கள் அண்ணா. இதில் என்ன பிரச்சினை என்பதை இன்னும் கொஞ்சம் தீவிரமாகப் பார்த்து, மற்ற வேலைகளை விட இந்த மக்கள் பிரச்சினையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் அண்ணா" என்று பக்குவமாக எடுத்துரைப்பதுதானே சரியாக இருக்கும்? அதை விடுத்து, இவ்வளவு தெனாவட்டாகப் பேசுவது எப்படிச் சரியாகும்?
தம்பி மகேந்திரன் நீங்களே கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த பேச்சிற்காகச் சமூக வலைத்தளங்களில் பல பேர் உங்களை வார்ன் பண்ணுகிறார்கள். ரொம்ப அசிங்க அசிங்கமாகத் திட்டுகிறார்கள். உள்ளபடியே இதைப் பார்க்கும்போது நமக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
ஏனென்றால், அந்தப் பையன் சின்ன வயதில் இருந்து வளர்ந்த விதம் எல்லாவற்றையும் நாம் நேரில் பார்த்திருக்கிறோம். அவர் திரைத்துறையில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியாமல் போனாலும், அவர் மீது நமக்கு ஒரு தனிப்பட்ட கரிசனமும் பாசமும் இருக்கிறது. ஆனால், பக்குவமில்லாமல் இப்படிப் பேசி தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து வைப்பது தவறானது.
-
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications