இரண்டு வாரம் ட்ரெய்னிங் தருகிறோம்! சந்தோஷமா இருக்கலாம் வாங்க! ஜாய் வெளியிட்ட அடுத்த போட்டோ
சென்னை: பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள், கடந்த சில மாதங்களாக இணையத்தில் பெரும் பேசுபொருளாகி வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி என்பவரைத் திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் அவர் திருமணம் செய்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது, ஜாய் கிரிஸில்டாவின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு, இந்த சர்ச்சைக்கு மீண்டும் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்துள்ளது.

சமையல் கலைஞரிலிருந்து நடிகர்
தனது தந்தை வழியில் சமையல் தொழிலுக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜ், குறுகிய காலத்திலேயே பிரபலமானார். பிரபலங்கள் வீட்டுத் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இவரின் சமையல் பிரபலம். சமையல் கலைஞராக மட்டும் இருந்த அவர், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தாலும், தொடர்ந்து நடிக்கவில்லை. பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
காவல் நிலையத்தில் புகார்
ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, இவர்களுக்குக் குழந்தைகளும் இருக்கும் நிலையில், திடீரென அவரும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே எப்படி அவர் இன்னொரு திருமணம் செய்யலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ரங்கராஜ் அமைதி காத்தார். புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே, அவர் தனது முதல் மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், நிலைமையை மேலும் குழப்பியது.
இதைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு நீதி வேண்டும் எனக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் அவர் X சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்தார். மேலும், ரங்கராஜுடன் வெளிநாடு சென்றது, முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ரொமான்ட்டிக்காக அவர் பேசிய வீடியோக்கள் எனப் பல தனிப்பட்ட பதிவுகளை அவர் பகிரங்கமாக வெளியிட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது.
ஜாய் கிரிஸில்டாவின் புதிய போஸ்ட்
இந்தச் சர்ச்சைகளின் பின்னணியில், ஜாய் கிரிஸில்டா தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு அதிரடியான கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ரங்கராஜன் தனிப்பட்ட வீடியோ ஒன்றை ஜாய் பகிர்ந்து வந்தார் அதில் "ஓய் பொண்டாட்டி" என்று ரங்கராஜன் குலைந்து குலைந்து பேசி இருப்பார். அதேபோல குரோஷியும் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த ரங்கராஜ், குரேஷியை கிண்டல் செய்து, "ரொமான்ஸ் பற்றவில்லை; என்னிடம் இரண்டு வாரம் ட்ரெய்னிங் வா" என்று இந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பேச்சைக் குறிக்கும் வகையில், ஜாய் கிரிஸில்டா தனது பதிவில், இரண்டு வாரம் எங்களிடம் ட்ரெய்னிங் வாருங்கள். சந்தோஷமாக வாழ்வதற்குச் சொல்லி தருகிறோம். கர்மா அனைத்தையும் பார்த்துக்கொள்ளும். நான் மென்ட்டலியாக ஸ்ட்ராங்காக இருக்கிறேன் எனக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜை நேரடியாகத் தாக்கியுள்ளார்.
சமையல் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரங்கராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைக்கு இப்படிப் பகிரங்கமாகத் தாக்கப்பட்டிருப்பது, இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. இந்தப் புதிய பதிவு, ரங்கராஜின் தரப்பிலிருந்து ஒரு பதிலைத் தூண்டுமா அல்லது இந்த விவகாரம் மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications